20வது ஆண்டு விழா

20th

திருமறைத்தீப 20 வது ஆண்டு விழா சிறப்புப் பதிப்பு

special edition ad

விலைவிவரங்கள்:
வால்யூம் 1: 1995-2001 – பக்கங்கள் 908 – ரூ. 950
வால்யூம் 2: 2002-2004 – பக்கங்கள் 612 – ரூ. 750
வால்யூம் 3: 2005-2007 – பக்கங்கள் 606 – ரூ. 750
வால்யூம் 4: 2008-2010 – பக்கங்கள் 606 – ரூ. 750
வால்யூம் 5: 2011-2014 – பக்கங்கள் 798 – ரூ. 950

தபாலில் பெற விரும்புபவர்களுக்கு தபால் கட்டணம் தனி.

சிறப்புப் பதிப்பாக இருப்பதினால் முன்பதிவு செய்வதன் மூலமே அச்சிட்டுத் தரப்படும். எனவே உங்கள் பிரதிக்கு தொடர்புகொள்ள வேண்டிய முகவரி:

சீர்திருத்த வெளியீடுகள்
6/87 காமராஜர் தெரு, திருவள்ளுவர் நகர்,
அயனாவரம், சென்னை 600023
கைப்பேசி: 9445671113
ஈமெயில்: rpchennai23@gmail.com

புதிய வெளியீடுகள்

new release ad

1689 விசுவாச அறிக்கையை மறுபதிப்பாக வெளியீடுகிறோம். நல்ல முறையில் அச்சிடப்பட்டு இது வெளிவருகிறது. தொடர்ந்தும் அச்சில் இருக்கவேண்டிய அவசியமான நூலிது.

“இரட்சிப்பின் படிமுறை ஒழுங்கு” நூலை வெளியிடுவதில் பெருமிதமடைகிறோம். இரட்சிப்பு பற்றிய மாபெரும் வேதபோதனைகளை விளக்கும் நூல் இது. தமிழில் இத்தகைய நூல் இல்லாத குறையைப் போக்கும். இப்போதனையைப் பற்றி எழுதியிருக்கும் அல்பர்ட் என். மார்டின் சொல்லுகிறார், “இயேசு கிறிஸ்து தன்னுடைய மீட்பின் செயல்மூலம் பெற்றுத் தந்திருக்கும் இரட்சிப்பின் இருதயமாக இருக்கும் வேதபோதனைகளே மறுபிறப்பும், நீதிமானாக்குதலும், மகவேட்பும், பரிசுத்தமாக்குதலுமாகும். நம்மில் ஆவியானவரால் விதைக்கப்படும் மீட்பின் பலன்களாகிய இந்தக் கிருபைகளைப்பற்றிய தெளிந்த அறிவில்லாமல் ஒருவரும் இருந்துவிடக்கூடாது. ஒவ்வொரு பிரசங்கியும் இவைபற்றிய தெளிவான அறிவை அடைந்திருந்து வேதபூர்வமாக தைரியத்தோடு பிரசங்கம் செய்ய இந்தப் போதனைகள் அவசியம். அத்தோடு, ஆண்டவருடைய பிள்ளைகள் அனைவரும் இந்தக் கிருபையின் ஆசீர்வாதங்களைப் பற்றிய நல்லறிவைப் பெற்றிருப்பது அவர்களுடைய விசுவாச வாழ்க்கையில் நிலைதடுமாறாமல் தொடரப் பெருதவி புரியும்.”

வாசிப்பின் அவசியத்தை வலியுறுத்தும் “சட்டையை விற்றாவது புத்தகங்களை வாங்கு” நூல்பற்றி சொல்லத் தேவையில்லை. நம்மினத்தில் அருகிக் காணப்படும் வாசிக்கும் வழக்கத்தை சுட்டிக்காட்டி அதற்கான நிவாரணத்திற்கு வழிகாட்டுகிறது இந்நூல். இது பலருக்கும் பயன்பட வேண்டும் என்பதே எங்கள் ஆவல்.