கேள்வி 27: கிறிஸ்து அரசராக எவ்வாறு பணி புரிகிறார்?
பதில் : கிறிஸ்து எம்மைத் தம் கீழ் கொண்டுவருவதன் மூலமும், எம்மை ஆண்டு பாதுகாபபதன் மூலமும், அவருதும் எமதுமான எதிரிகளை அடக்கி வெற்றி கொள்வதன் லமும் அரசராகப் பணி புரிகிறார்.
(சங்கீதம் 110:2-3; ஏசாயா 33:22; 1 கொரிந்தியர் 15:25)
விளக்கக்குறிப்பு:
ஒரு போரசின் அரசராக இயேசு கிறிஸ்து இருக்கிறார் என்ற திருமறை போதிக்கும் பேருண்மையை இவ்வினாவிடை விளக்குகின்றது. கிறிஸ்து சிலுவையிலே அறையப்பட்டபோது ‘இவன் யூதருடைய ராஜாவாகிய இயேசு’ (மத்தேயு 27:37; மாற்கு 15:26; லூக்கா 23:38; யோவான் 19:19) என்ற வார்த்தைகள் அச்சிலுவையில் பொறிக்கப்பட்டிருந்தன. துர்க்குணம் உடையவர்கள் இதைப்பயன்படுத்தி கிறிஸ்துவை அவமதிக்க முனைந்தபோதும் இவ்வுண்மையை கிறிஸ்துவை அவமதிக்க முனைந்தபோதும் இவ்வுண்மையை இவ்விதமாக வெளிப்படுத்துவதும் கடவுளின் திட்டமாகவிருந்தது. சங்கீதக்காரன் 2 ஆம் சங்கீதத்தில் இதனையே முன்னுரைக்கிறான். பேதுரு அப்போஸ்தலர் 4:25 இல் இதையே உறுதிப்படுத்துகிறான். சிலுவையில் இறந்து கொண்டிருந்த கள்வனும் இயேசுவை நோக்கி, ‘ஆண்டவரே,நீர் உம்முடைய ராஜ்யத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும்’ என்று இதனையே குறிப்பிட்டுக் கூறினான். இயேசு அவனுக்கு பதிலளிக்குமுகமாக அவனை நோக்கி, ‘இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்கிறேன் என்றார்’. (லூக்கா 23:42, 43) ஆகவே, கிறிஸ்து ஒரு பேரரசிற்கு அரசராக உள்ளார் என்ற உண்மையை ஆராய்வோம்.
முதலாவதாக, கிறிஸ்துவின் அரசாட்சி என்பது நிகழ்கால ஆவிக்குரிய நடவடிக்கை என்பதை நாம் உணர்தல் வேண்டும் இதனை மேலும் விளங்கிக் கொள்ள வேண்டுமானால் இவ்வினாவிடையின் போதனையை நாம் ‘டிஸ்பென்சேஷனலிசம்’ () என்ற நவீனமானதும், தவறானதுமான போதனையோடு ஒப்பிட்டுப் பார்த்தல் அவசியமாகிறது. இப்போதனையைப் பின்பற்றுபவர்களில் பலரும் திருமறையின் அடிப்படைப் போதனைகளில் நம்பிக்கை கொண்டவர்களே. இருந்தபோதும் வேதத்தை விளக்கும் முறையைப் பொறுத்தவரை இவர்கள் ஒரு செய்றகையான, தவறான விளக்க முறையைப் பயன்படுத்துகின்றனர். டின்பென்சேஷனலிசம்’ வேத வரலாற்றை வெவ்வேறு காலக்கூறுகளாகப் () பிரித்து இக்காலகட்டங்களில் கடவுள் மனிதனோடு வெவ்வேறுவிதங்களில் தொடர்பு கொண்டு செயற்பட்டார் எனப் போதிக்கின்றது. உதாரணமாக மோசேயின் காலத்தில் கடவுள் மனிதரோடு நியாப்பிரமாணத்தின் மூலமாகத் தொடர்பு கொண்டார் எனவும், இப்போதனை விளக்குகினற்து. ஆனால் உண்மையில் கடவுள் எப்போதுமே நியாயப்பிரமாணத்தைக் கொண்டிருந்து அதை வலியுறுத்தியதோடு மனிதன் பாவத்தில வீழ்ந்த நாள் முதல் அவன் இரட்சிப்பை அடையக்கூடிய ஒரே வழியாக கிருபையையே கடைப்பிடித்து வருகிறார்.
‘டிஸ்பென்சேஷனலிசத்தன்படி’ கிறிஸ்து இன்னும் அரசராகவில்லை. இப்போதனை, கிறிஸ்து ஆரம்பத்தில் யூதர்களின் அரசராக வந்தபோது அவர்கள் அவரது நிராகரித்து விட்டதால், அவர் தனது இராஜ்யத்தை ஏற்படுத்துவதைத் தாமதித்துள்ளார் என்று விளக்குகின்றது. இந்த இடைக்காலத்தில் கடவுள் மனிதர்களை சபையின் மூலமாக இரட்சித்துக் கொண்டிருக்கிறார் என்றும், ஆனால் கிறிஸ்து மீண்டும் வருகிறபோது, அவர் தனது இராஜ்யத்தை இவ்வுலகில் ஏற்படுத்தி ஆயிரம் வருடங்கள் பூரணமான ஆட்சியை ஏற்படுத்துவார் என்றும் இக்கோட்பாடு விளக்குகின்றது.
திருமறையோ இப்போதனைக்கு எதிரான கருத்தைத்தான் தெரிவிக்கின்றது. (1) கிறிஸ்துவின் இராஜ்யம் ஏற்கனவே இவ்வுலகில் நிலவுகின்றது. இதனையே பவுல் கிறிஸ்து, ‘இருளின் இதிகாரத்தினின்று நம்மை விடுதயை£க்கி, தமத அன்பின் குமாரனுடைய இராஜ்யத்திற்கு’ நம்மை உட்படுத்தியிருப்பதாகத் தெரிவிக்கிறார் (கொலோசேயர் 1:13) (2) கிறிஸ்துவின் இராஜ்யம் கண்ணால் காணமுடியாத ஆவிக்குரிய இராஜ்யமாயிருக்கிறது. இயேசு சொன்னார், ‘என் இராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதல்ல’ (யோவான் 18:36), அத்தோடு, ‘தேவனுடைய இராஜ்யம் பிரத்தியட்சமாய் வராது’ (லூக்கா 17:20) என்றும் கூறினார். (3) கிறிஸ்துவின் இராஜ்யம் எப்போதுமே முடிவுக்கு வராது (தானியேல் 2:44; 2 பேதுரு 1:11) என்றாலும், உலக முடிவில் பூரணமான ஒரு நிலைமை ஏற்படுவதற்கு இது இடம் கொடுக்கும் (1 கொரி. 15:24). கிறிஸ்துவின் இராஜ்யம் இப்போது விஸ்தரிக்கப்படுகிறது. உலக முடிவில் அது பூரணத்துவம் பெறும். ஆகவே ‘டிஸ்பென்சேஷனலிசத்தின்’ அடிப்படைத் தவறே கிறிஸ்துவின் இராஜ்யத்தை, அவரது சபையிலிருந்து பிரிப்பதாகும்.
இரண்டாவதாக, கிறிஸ்துவின் இராஜ்யமே சபையாகாது. இது ரோமன் கத்தோலிக்கர்கள் விடும் தவறாகும். இவர்களது கருத்துப்படி ரோமன் கத்தோலிக்க சபையே இவ்வுலகில் தேவ ராஜ்யமாயிருக்கிறது. இதானல்தான் ரோமன் கத்தோலிக்க சபை உலகில் உள்ள அனைத்து மக்களையும், நிறுவனங்களையும் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முயற்சி செய்கிறது. இவ்விதமாகவே கிறிஸ்து போப்பின் மூலமாக உலகில் தனது அதிகாரத்தைச் செலுத்துகிறார் என்பது ரோமன் கத்தோலிக்க சபைப் போதனை.
இவற்றிற்கெல்லாம் மாறாக, சீர்திருத்தவாதம் போதிப்பதென்ன? கிறிஸ்துவின் இராஜ்யமும், சபையும் ஒன்றுக்கொன்று நெருங்கிய, ஆழ்ந்த தொடர்புள்ளதாக இருந்தபோதும், இரண்டும் ஒன்றையே குறிப்பதாகக் கொள்ளக்கூடாது. அதேவேளை திருமறை இவ்விரு வார்த்தைகளையும் சில வேளைகளில் மாறி மாறிப் பயன்படுத்தியிருப்பதையும் அவதானிக்கலாம். கிறிஸ்துவே சபையின் அரசராகவும், தலைவராகவும் உள்ளார். ஆனால் அவர் தனது சபையையும் உள்ளடக்கிய ஒரு பரந்த இராஜ்யத்தை ஆளுகிறவராயிருக்கிறார்.
சீர்திருத்தப் போதனையின்படி கிறிஸ்துவின் இராஜ்யத்திற்கும், சபைக்குமுள்ள ஒற்றுமைகளையும், வேறுபாடுகளையும் பின்வருமாறு விளக்கலாம்:
ஒற்றுமைகள்:
1. இரண்டிற்கும் கிறிஸ்துவே தலைவராக இருக்கிறார்.
2. மெய்யான கிறிஸ்தவர்கள் மட்டுமே இரண்டிலும் அங்கத்தவர்களாக இருக்க முடியும்.
3. ஒன்றில் அங்கத்தவராக இல்லாமல் மற்றதில் ஒருவர் அங்சசத்தவராக இருக்க முடியாது.
வேறுபாடுகள்:
1. சபைகள் கண்களால் காணக்கூடியதாக இருப்பதுபோல் கிறிஸ்துவின் இராஜ்யம் நம் கண்களுக்குப் புலப்படாது.
2. இராஜ்யத்திற்கான திறவுகோள்களை (பிரசங்கத்தின் மூலமும், சபை ஒழுங்குக் கட்டுப்பாடு மூலமும் ஒருவரை இராஜ்யத்திற்குள் அனுமதிக்கவும், வெளியேற்றவும்) திருச்சபை கொண்டிருப்பதுபோல் (மத்தேயு 16:19) சபைக்குள் எவரையும் அனுமதிப்பதற்கு கிறிஸ்துவின் இராஜ்யத்திற்குத் திறவுகோள்கள் இல்லை.
இன்று கிறிஸ்துவின் இராஜ்யத்திற்கும், திருச்சபைக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லாததுபோல் பலர் நடந்த வருகிறார்கள். முக்கியமாக திருச்சபையில் அங்கத்தவராக இருந்து வேத பூர்வமாக தேவ சேவையில் ஈடுபடாது சபைக்கு வெளியில் இருந்து காரியம் பார்க்க முனைவதற்கு இக்கோட்பாட்டை விளங்கிக், கொள்ளாததும் ஒரு காரணமாகும். சபைக்கு வெளியிலும் கிறிஸ்துவின் இராஜ்யம் பரந்துள்ளது என்ற போதனையைத் தவறாகப் புரிந்து கொண்டு சபையைத் துறந்து நிறுவனங்கள் அமைத்து, அல்லது நிறுவனங்களில் சேர்ந்து பலர் தேவ சேவையில் ஈடுபட முனைகிறார்கள். ‘டிஸ்பென்சேஷனலிசத்தின்’ ஒரு போதனை கிறிஸ்த இன்று சபைக்கு முழுக்குப் போட்டு விட்டு ஈடுபட்டிருக்கிறார் என்பதாகும். ஆனால் கிறிஸ்தவ தான் நேசிக்கும் சபையை இன்றும் விவாகரத்து¢ச் செய்துவிடவில்லை. அத்தோடு கிறிஸ்துவின் இராஜ்யம் பிரிக்க முடியாதளவுக்கு அவரது சபையோடு இணந்திருப்பதால் அதனைப் பிரிக்க முனைபவர்கள் வேதம் புரியாதவர்களாயிருக்கிறார்கள். கிறிஸ்துவின் இராஜ்யத்திற்காகப் பாடுபடுகின்ற, ஜெபிக்கின்ற, எவரும் அவரது சபைக்காகப் பாடுபடவும் ஜெபிக்கவும் வேண்டும். கிறிஸ்துவின் இராஜ்யத்தை நேசிக்கும் எவரும் அவரது சபையை நேசிக்க வேண்டும். ஏனெனில் ஒன்று வளர்கிற போதே மற்றதும் வளர்கிறது. ஒன்று பாதிக்கப்பட்டால் மற்றதும் பாதிக்கப்படும்.
கிறிஸ்து அரசாரக பணிபுரிவது மட்டுமல்ல ‘அவர் தமதும், எமதுமான எதிரிகளை அடக்கி வெற்றி கொளள்வும் செய்கிறார்’ என்று இவ்வினாவிடை போதிக்கின்றது. ஆகவே இயற்கையாகவே அவரது இராஜ்யத்தின் எதிர்காலத்தைப் பற்றிய கேள்வி எழுகின்றது. அதாவது ‘அனைத்து எதிரிகளும் அவரது காலடியில் வருவது’ எப்போது? (1 கொரி. 15:25).
பிரி-மிலேனியலிசம் ஆயிரம் வருட கால ஆட்சிக்குமுன் கிறிஸ்துவின் வருகை
போஸ்ட்-மிலேனியலிசம் ஆயிரம் வருட கால ஆட்சிப்பின் கிறிஸ்துவின் வருகை
அ-மிலேனியலிசம் ஆயிரம் வருட கால ஆட்சியை உருவகமாகக் () கருதுகிறது
பிரி-மிலேனியலிஸக் கோட்பாட்டைப் பின்பற்றுபவர்கள், கிறிஸ்து மீண்டும் வரும்போது விசுவாசிகளை உயிர்த்தெழச் செய்து இவ்வுலகில் ஆயிரம் வருட கால நல்லாட்சியை ஏற்படுத்துவார் என்று நம்புகிறார்கள். இதற்குப் பின்பே, அவிசுவாசிகளின் உயிர்த்தெழுதலும், நியாயத் தீர்ப்பு நாளும், அதன்பின் நித்திய காலமும் ஏற்படும் என்பது இவர்களின் போதனை. இப்போதனையை திருமறை பூர்வமானதாக நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாதிருக்கின்றது.
ஆனால், போஸ்ட்-மிலேனியலிசக் கோட்பாட்டைப் பின்பற்றுபவர்கள், இவ்வுலக முழுவதும் நற்செய்தி பரப்பப்படும்வரை கிறிஸ்து கண்ணுக்குத் தெரியாத தனது நிகழ்கால ஆன்மீக இராஜ்யத்தைத் தெடர்ந்து நடத்துவார் என்று கருதுகிறார்கள். இதன்பின் ஆயிரவருட காலத்திற்கு உலகில் நீதியும் சமாதானமும் நிகழும் எனவும், அதன்பிறகே கிறிஸ்து மறுபடியும் வருகை, தந்து, மரித்தவர்களை உயிர்த்தெழச் செய்து, உலகத்தை நியாயந் தீர்த்து, நித்திய காலத்தை ஏற்படுத்துவார் என்றும் எதிர்பார்க்கிறார்கள்.
திருமறையில் கூறப்படும் ஆயிரம் வருட கால ஆட்சியை வருவகமாகக் கருதும் அ-மிலேனியலிசக் கோட்பாட்டைப் பின்பற்று பவர்களோ நியாயததீர்ப்பு நாள்வரை உலகில் நல்லதும், தீயதும் கலந்தே வளரும் எனவும், எந்தவித முன்னறிவிப்பும் கொடாது கிறிஸ்து ஒருநாள் மறுபடியும் வருகை தந்து மரித்தோரை உயிர்த்தெழச் செய்து நியாயத் தீர்பார் என்று போதிக்கிறார்கள். இதன்பின்பே நித்தியகாலம் ஏற்படும் என்பது இவர்கள் கருத்து.
இம்மூன்றிலும் இறுதியாக நாம் பார்த்த அ-மிலேனியலிசக் கோட்பாடே திருமறை பூர்வமானதாக அமைவதாக நாம் கருதுகிறோம். ஏனெனில்:
1. கிறிஸ்து மறுபடியும் எப்போது வருவார் என்று ஒருவருக்குமே தெரியாதென திருமறை போதிக்கின்றது (அப். 1:7; மத்தேயு 24:36; 1தீமோ 5:1). ஆயிரம் வருட கால ஆட்சிக்குப்பின் கிறிஸ்து வருவார் என்பதை மனிதர்கள் அறிந்திருந்தால் இது உண்மையாக இருக்க முடியாது.
2. நிகழ்காலத்தையே திருமறை இறுதி நாட்களாகக் கருதுகிறது. (எபிரேயர் 1:2; யோவான் 6:39; 11:24; 12:48; அப்போஸ்தலர் 2:17; 2 தீமோத்தேயு 3:1). இது உண்மையானால் கிறிஸ்துவின் வருகையின்பின்பு ஆயிரம் வருட ஆட்சி காலத்தை நாம் எதிர்பார்க்க முடியாது.
3. மத்தேயு 13 ஆம் அதிகாரத்தில் இயேச போதிக்கும் ‘விதைகளும், களைகளும்’ உவமையில், அறுவடை நாள் வரையில் அவை இரண்டும் சேர்ந்தே வளரும் என்று பார்க்கிறோம். ஆகவே கிறிஸ்துவின் வருகைக்கு முன்பு பூரணமான நீதியும் சமாதானமும் உலகில் நிலவும் என்ற கருத்து இதற்கு முரணாகத் காணப்படுகின்றது.