கேள்வி? – பதில்!

‘ஒப்பீட்டு சமயப் போதனையும்’, ‘தத்துவக் கலந்துரையாடலும்’

மற்ற சமயங்களைப் படிப்பதும், பிறசமயத்தாருடன் தத்துவக் கலந்துரையாடலில் ஈடுபடுவதும் நன்மை பயக்கும் என்று கூறுகிறார்களே?

ஒளியின் தேவனாகத் தன்னைக் காட்டி மக்களை மயக்கும் செயலையே தொழிலாகக் கொண்டுள்ள சாத்தான் இன்று கிறிஸ்தவத்திற்கு எதிராகச் செய்யும் பல காரியங்களில் இரண்டுதான் ‘ஒப்பீட்டு சமயப் போதனையும்’ (Comperative religious studies), ‘தத்துவக் கலந்துரையாடலும்’. இவை ஒருவிதத்தில் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. அண்ணனும், தம்பியும்போல என்று கூடச் சொல்லலாம்.

அநேக வேதாகமப் பாடசாலைகளில் ஒப்பீட்டு சமயப் போதனை பாடத்திட்டத்தில் இன்று முக்கிய இடம் வகிக்கின்றது. பவுல் அப்போஸ்தலனைக் காரணம் காட்டி இதை நியாயப்படுத்துவார்கள் சிலர். அந்நிய மதங்களில் அறிவில்லாமல் இருந்திருந்தால் பவுலால் அத்தேனே பட்டணத்தில் அற்புதமாகப் பிரசங்கித்திருக்க முடியுமா என்று கேட்கிறார்கள். ஆனால் பவுல் அம்மதங்களை கற்று அவற்றில் மேலான அறிவு பெற்றிருந்ததாக வேதம் போதிக்கவில்லை. பவுல் இந்நகரத்தில் போகிற வழியில் கண்டதை வைத்தே பிரசங்கம் செய்தான் என்று வேதம் கூறுகிறது. திருமறையில் அக்கறை செலுத்தி, அதைப் போதிக்காமல் மற்ற மதங்களின் பெருமைகளை ஆராய்ந்து கொண்டிருப்பவர்களின் அடிப்படை பிரச்சனையே அவர்களுக்கு திருமறையின் அதிகாரத்திலும் கிறிஸ்தவத்திலும் நம்பிக்கையில்லாததுதான். நற்செய்தியை மற்றவர்களைப் பாதிக்காதவிதத்திலும், அவர்கள் மனம் புண்படாதவிதத்திலும் எடுத்துச் சொல்ல வேண்டுமானால் மற்ற மதங்களில் நமக்கு அறிவு வேண்டும் என்பது இவர்கள் வாதம். மற்றவர்கள் மனம் புண்படாதவகையில் நற்செய்திப் பிரசங்கம் அமைய வேண்டுமானால் அதைப் பிரசங்கிக்காமல் இருப்பதே நல்லது. ஏனெனில் நற்செய்தி கேட்பவர்களின் இருதயத்தைப் பிளப்பதற்காகவே கொடுக்கப்பட்டிருக்கிறது. அதை மாற்ற முயல்வது கர்த்தருக்குப் பொறுக்காத செயலாகும். மற்ற மதங்களின் பெருமையை ஆராய்ந்து கொண்டிருப்பவர்கள் தங்கள் கிறிஸ்தவ விசுவாசத்தைக் குறித்து சிந்தித்துப் பார்ப்பது நல்லது. ஏனெனில் ‘லிபரல்’ கொள்கைகளைப் பின்பற்ற இதுவே முதற்படி.

தத்துவக் கலந்துரையாடலின் (Dialogue) அவசியத்தை வற்புறுத்துபவர்கள் ‘லிபரல்’ கொள்கையாளர்கள் அல்லது அதன் வழியில் காலடி வைத்திருப்பவர்கள். மாற்று மதத்தாரின் மனதைப் புண்படுத்தாது, அவர்களை சரிசமமாகப் பாவித்து, அவர்களுடைய மதத்திலும் சிறப்பம்சங்கள் உண்டு என்ற பரந்த மனப்பான்மையோடு அவற்றை ஏற்று, அவர்களுடன் கலந்துரையாடி கிறிஸ்தவத்தின் பெருமைகளையும் விளக்க வேண்டும் என்பதே தத்துவக் கலந்துரையாடலில் ஈடுபடுபவர்களின் போதனை. ஆனால் திருமறையின் அதிகாரத்தின் அடிப்படையில் மட்டும்தான் நமக்கு எவருடனும் சரிசமனான பேச்சுவார்த்தையோ, ஐக்கியமோ இருக்க முடியும்.

சமயங்களுக்கிடையில் ‘சமயசமரசக் கலவையை’ (Syncretism) வற்புறுத்தும் தயானந்தன் பிரான்ஸிஸ் ‘இன்றைய சமுதாய அமைப்பில் சைவர்களோடும் பிற சமயத்தவரோடும் இந்நாட்டில் கிறிஸ்தவர்கள் உரையாடல்களில் ஈடுபடுவதற்கு இறைவன் அமைத்துத் தந்துள்ள தளமாகவே சமரசப் பொதுக் கொள்கை கருதப் பெறுதல் வேண்டும்’ என்று எழுதுகிறார். எந்தளவுக்கு தமிழ்க் கிறிஸ்தவர்கள், சபைகள் மத்தியில் இன்று சமய சமரசம் (Ecumanism) பரவியுள்ளது என்பதற்கு இது ஒரு சான்று. இதன் பாதிப்புக்குள்ளாகாத கிறிஸ்தவ சபைகளையும், நிறுவனங்களையும் இன்று காண்பதும் அரிது. ஆகவே இவற்றை நாம் அடியோடு கைவிட்டு, மனித விடுதலைக்காக கர்த்தர் அளித்துள்ள ஒரே வழியான நற்செய்திப் போதகத்தை மட்டுமே நம்பி நடத்தல் அவசியம்.

மறுமொழி தருக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s