தமிழில் கிறிஸ்தவ நூல்களுக்கு இன்று குறைவில்லை. புத்தகக்கடைகள் எல்லாம் நிரம்பி வழிகின்றன. ஆனால் அவை எல்லாமே ஆவிக்குரிய வாழ்க்கைக்குத் துணைபுரியுமா என்பது சந்தேகமே. தவறான கொள்கைகளைப் பரப்பும் நூல்களே அநேக புத்தகக்கடைகளை அலங்கரிக்கின்றன: யொங்கி சோ, தினகரன், சாம் ஜெபத்துரை போன்றோரின் மோசமான வேத அடிப்படையில் அமையாத நூல்களுக்கு மத்தியில் நல்ல நூல்களும் வெளிவருவது மகிழ்ச்சி தரும் காரியமே. சீர்திருத்தவாத காலத்து அறிஞர்களின் இறவாத் தன்மையுடைய சில இலக்கியங்கள் இன்று தமிழில் வெளிவந்துள்ளன. கல்வின், ஜோன் ஓவன், ப்ளேவல், ஆப்ரகாம் பூத் போன்றோருடையது மட்டுமன்றி, இதே கொள்கைகளைத் தழுவி எழுதிய பின்வந்தவர்களான பின்க், ஸ்பர்ஜன் போன்றோரின் நூல்களும் தமிழில் உள்ளன. நல்ல நூல்கள் ஆயிரக்கணக்கில் இல்லாவிட்டாலும் இதுவரை வெளிவந்திருப்பவை உன்னதமான எதிர் காலத்தை எடுத்துக்காட்டும் சின்னங்களாக இருக்கின்றன. இந்நூல்களை வாசித்து ஆவிக்குரிய வாழ்வில் ஆசீர்வதிக்கப்பட்ட போதகர்கள், கிறிஸ்தவர்கள் பலரை நாமறிவோம். வாசகர்கள் இன்றே இவற்றைப் பெற்றுப்பயனடையும் முயற்சியில் ஈடுபட வேண்டும்.
இங்கிலாந்தில் உள்ள ‘கிறேஸ்பப்ளிகேசன்ஸ்’ என்ற வெளியீட்டு நிறுவனத்தாரே காலத்தால் அழியாத இந்நூல்களை முதலில் சுருக்கமாக ஆங்கிலத்திலும் பின்பு தமிழிலும் மொழி பெயர்த்து வருகின்றனர். சென்னையில் உள்ள தமிழ் பாப்திஸ்து நிறுவனம் இவற்றை வெளியிடுகின்றது. இந்நூல்களின் பட்டியலை இங்கே தந்துள்ளோம்.
கிறிஸ்துவின் மரணத்தினால் உண்டாகும் வாழ்வு (ஜோன் ஓவன்)
கிருபையின் மாட்சி (ஆபிரகாம் பூத்)
கிறிஸ்தவன் யார் (ஈ. ஜே. ஆப்பில்பீ)
ஆளுகிறவர் யார்? (ஆத்மத் பின்க்)
கிறிஸ்தவனின் உள்ளான வாழ்க்கை (ஆ. வின்ஸேலோ)
கடவுள் செயலின் இரகசியம் (ஜோன் ப்ளேவல்)
வேத வாசிப்பின் நன்மைகள் (ஆர்தர் பின்க்)
மெய் வாழ்வு (பிலிப்பு டாட்ரிட்ஜ்)
சிறந்த கிறிஸ்தவன் (வில்லியம் லா)
கடவுளை அறிய முடியுமா? (கர்ட்)
கற்கள் பேசுகின்றன (ஏச். ஜே. ஆப்பில்பீ)
பிறவி அடிமைகள் (மார்டின் லூதர்)
பரிசுத்த ஆவியானர் (ஏச். ஜே. ஆப்பில்பீ)
திருமறையை விளக்கும் முறை (கர்ட்)
ஸ்பர்ஜன் அறிவுரைகள்
ஸ்பர்ஜன் பிரசங்கள்
சீர்திருத்த திருச்சபையின் கொள்கைகள் (ஜோன் கல்வின்)
குழந்தைகளுக்கு
ஞானத்தில் வளர்ச்சி (சூசன் ஹார்டிங்)
விளக்கவுரைகள்
ஆதியாகமம் (ஏச். ஜே. ஆப்பில்பீ)
யோசுவா (ரே. போட்டர்)
எபேசியர் (பீட்டர் நைலோ)
ஓசியா – மீகா (டி. ஏ. துரோவர்)
நாகூம் – மல்கியா (டி. ஏ. துரோவர்)
வேத ஆய்வு நூல்கள்
வேதாகம சொல் அகராதி
தமிழ் வேதாகம ஒத்த வாக்கிய அகராதி (டி. ஏ. துரோவர்)
தரம் நிறை கிறிஸ்து இயேசுவை சரியாய்த் தெரிந்துகொள்ள தருகிறீர் நூல்கள் பல. கலப்படமற்ற நற்செய்தி அகிலமெல்லாம் பரவ என் வாழ்த்துக்கள்.
LikeLike
Please mail to me the availability of “Tamil Vethagama Oththa Vakiya Agaraathi by D. A. Thrower.”
LikeLike
Please call Pastor James, Chennai for information about this. +91 9445671113.
LikeLike
மிக்க நன்றி.
LikeLike
சென்னையில் உள்ள தமிழ் பாப்திஸ்து நிறுவனத்தின் முகவரி தந்தால் எங்களுக்கு மிக நன்மையாக இருக்கும்
LikeLike
ஓ அருமையான நூற்பட்டியல்கள். இவற்றில் சில ELS நிறுவனத்தார் வெளியிட்டுள்ளார்கள். மேலே உள்ள நூல்களில் சில என்னிடம் உண்டு. மேலும் சில நூல்களை வாங்க எண்ணியிருந்தேன். இந்த நூற்பட்டியல் எனக்கு மிக உபயோகமாக உள்ளது. நன்றி
LikeLike