1. மனிதன் மனம், உணர்ச்சிகள், சித்தம் ஆகியவற்றைக் கொண்டிருக்கிறான். ஆகவே, அவனது மனத்தையும், உணர்ச்சிகளையும் தாண்டி சித்தத்தை மட்டும் அசைக்க முயல்வது தவறு.
2. அர்ப்பண அழைப்பு, அளவுக்கு அதிகமாக மனிதனின் சித்தத்தை வசீகரிக்க முனைவதால் சத்தியத்தைத் தவிர்த்த வேறு காரணிகளால் உந்தப்பட்டு அவன் நற்செய்தியில் ஆர்வம் கொள்ளக்கூடும். உதாரணம்: பிரசங்கியின் பேச்சுத் திறமை, இசையின் ஈர்ப்பு.
3.பிரசங்கத்திலிருந்து சுவிசேஷ அழைப்பு எப்போதுமே பிரிக்கப்படக்கூடாது. சீர்திருத்தக் கோட்பாடுகளின்படி எந்தவொரு திருநியமமும் பிரசங்கத்திலிருந்து வேறுபடுத்தப்படக்கூடாது. சுவிசேஷ அழைப்பு பிரசங்கத்தில் உள்ளடங்கியதாக இருக்க வேண்டும்.
4. பாவிகள் உடனடியாக அதே இடத்தில் திடீரெனத் தீர்மானம் எடுக்க வேண்டும் என்ற போதனை வேதத்திற்கு முரணானது.
5. சுவிசேஷப் பிரசங்கி பரிசுத்த ஆவியைத் தான் நினைத்தபடி ஆட்டி வைக்கலாம் என்ற எண்ணம் தவறானது.
6. இந்நவீன அழைப்பு முறை உண்மையான பாவ உணர்வை மனிதனுக்கு ஏற்படுத்தத் தவறுகிறது.
7. இந்நவீன அழைப்பை ஏற்று கூட்டங்களில் முன்னால் போவதால் இரட்சிப்பை அடையலாம் என்ற எண்ணம் தவறானது.
8. பரிசுத்த ஆவிக்கு நமது உதவி தேவை என்ற எண்ணத்தை ஏற்படுத்தும் இந்நவீன அழைப்பு முறை, முழுதாக ஆவியானவரின் செயலில் ஏற்படும் சந்தேகத்தின் அடிப்படையில் அமைந்தது.
9. வேதத்தின் மறுபிறப்பு பற்றிய போதனைகளை இது நிராகரிக்கிறது. பரிசுத்த ஆவிக்கு நமது துணை தேவையில்லை. அவரது செயலை வேறு எவரும் செய்ய முடியாது.
10. எந்தவொரு பாவியும் எந்நிலையிலும், எப்போதுமே தீர்மானம் எடுக்க முடியாது; எடுக்கும்படி வேதம் போதிக்கவில்லை.
(மார்டின் லொயிட் ஜொன்ஸின் “பிரசங்கிகளும், பிரசங்கமும்” என்ற நூலின் பதினான்காவது அதிகாரத்திலிருந்து எடுக்கப்பட்டது.)