ஆசிரியரிடமிருந்து!

திருமறைத்தீபம், இவ்விதழுடன் ஐந்தாவது ஆண்டை நிறைவு செய்கிறது. கடந்த ஐந்து வருடங்களில் தீபத்தின் மூலம் பல நாடுகளில் அநேக ஆத்துமாக்களைக் கர்த்தர் ஆசீர்வதித்துள்ளதை தொடர்ந்து வரும் கடிதங்களின் மூலம் அறிந்து கொள்கிறோம். கடிதமெழுதி தங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்வதோடு, பத்திரிகைக்காக அன்றாடம் ஜெபிக்கிறோம் என்றும், தொடர்ந்து சத்தியத்தை மட்டும் எழுதுங்கள் என்று எம்மை ஊக்குவித்து வரும் நூற்றுக்கணக்கான அன்பு வாசகர்களுக்கு எமது உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வருட ஆரம்பத்தில் பத்திரிகை செலவு அதிகரித்ததன் காரணமாக மேலைத்தேய நாடுகளிலும், மலேசியா, சிங்கப்பூர், மத்திய கிழக்கு நாடுகளில் உள்ளவர்களுக்கு மட்டும் சந்தா அறிமுகப்படுத்த நேர்ந்தது. ஆனால், பத்திரிகையை எல்லோருக்கும் தொடர்ந்து அனுப்பிவந்துள்ளோம். கர்த்தர் இவ்வூழியம் தடையில்லாது தொடர வேண்டும் என்பதை எமக்கு உணர்த்தி, சந்தா இல்லாமலேயே பத்திரிகையைத் தொடர்ந்து இலவசமாக அனுப்பும் வசதியை ஏற்படுத்தித் தந்துள்ளார். ஆகவே, இனிப்பத் திரிகைக்கு சந்தா இல்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். இருந்தபோதும், இப்பத்திரிகையின் மூலம் பயனடையும் அன்பர்கள் அனுப்பும் நன்கொடைகள், பலருக்கும் இதனை இலவசமாகத் தொடர்ந்து அனுப்பத் துணைபுரியும். ஆகவே, இவ்வூழியத்தில் பங்குகொள்ள ஆர்வமுள்ளவர்கள் உங்கள் நன்கொடைகளை பத்திரிகையின் முகவரிக்கு அனுப்புங்கள்.

பத்திரிகை தொடர்ந்து தேவைப்படாது என்று கருதுபவர்கள் எமக்கு எழுதித் தெரிவித்தால் முகவரி லிஸ்டில் இருந்து உங்கள் முகவரியை அகற்றிவிடுகிறோம். பத்திரிகை வேத அறிவைப் பெற்றுக்கொள்வதில் வாஞ்சையுள்ளவர்களைத் தொடர்‍ந்து அடைய வேண்டுமென்பதே எமது நோக்கம்.

கடந்த ஐந்து வருடங்களுக்கு முன் இப்பத்திரிகை ‍எந்நோக்கத்திற்காக உருவாகி, உழைக்க முன்வந்ததோ அந்நோக்கத்தை மனதில் கொண்டே வரப்போகும் 2000 வருடத்திலும் பத்திரிகை செயல்படும். நமது முன்னோர்கள் குருதி சிந்தி பாதுகாத்த வேதசத்தியங்களை வெளிப்படுத்தி, சீர்திருத்தவாதக் கிறிஸ்தவம் தமிழர் மத்தியில் பல்கிப் பெருக பத்திரிகை பயன்பட வேண்டுமென்பதே எமது 2000ம் வருட இலட்சியம்.

மறுமொழி தருக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s