எலிசாவை ஏளனம் செய்ததற்காக 42 வாலிபர்களை (தமிழ் வேதத்தில் சிறு பிள்ளைகள் என்றிருக்கிறது. அவர்கள் சிறு பிள்ளைகள் அல்ல.) இரு பெரும் பெண்கரடிகள் கொன்று போட்டன என்று 2 இராஜாக்கள் 2: 23, 24-ல் வாசிக்கிறோம். கருணையுள்ள கர்த்தர் இதை ஏன் அனுமதித்தார்? பெற்ற வயிறுகள் பிள்ளைப் பாசத்தால் கத றும்படி இந்தக் காரியம் ஏன் நிகழ்ந்தது? இதற்கு பெற்றவர்களும் கொடூர மாக இறந்துபோன வாலிபர்களுமே பொறுப்பு. வாலிப வயதில் கர்த்தரால் கொடுக்கப்பட்டுள்ள வசதிகளைப் பயன்படுத்தி நல்ல வழிகளில் போகாமல், படிப்பதிலும், ஆத்மீகக் காரியங்களிலும் கவனத்தை செலுத்தாமல் காலேஜ் பெண்களிடம் கைவரிசை காட்டுவது, மாலையில் சக வாலிபர்களுடன் கூடி வீண் அரட்டை அடிப்பது, சபையையும், போதகர் களையும் அலட்சியப்படுத்துவது என்று வாழ்ந்து வந்த அந்த வாலிபர்கள் அன்றைக்கு எலிசா யார் என்று தெரிந்தே அவனை அவமதித்தார்கள். அவர்கள் கூட்டமாகக் கூடி எலிசாவை சுற்றி வந்து ஏளனம் செய்தார்கள். எலிசா தீர்க்கதரிசி இந்த உலகத்தில் கர்த்தருக்குப் பிரதிநிதியாக இருந்தான். அவனிடமே கர்த்தருடைய வார்த்தை இருந்தது. அவன் கர்த்தரின் வழிகளில் போகும்படி இஸ்ரவேலரை நிர்ப்பந்தித்தான். அதெல்லாம் நன்றாகத் தெரிந்திருந்த அந்த வாலிபர்கள், கர்த்தரையும் அவருடைய வழிகளையும் வெறுத்து, ஊர் வம்பிலும், அரட்டை அடிப்ப திலும் காலத்தை செலுத்தி உலக இச்சைக்கு உட்பட்டு எலிசாவை துச்சமாக எண்ணி வலுச்சண்டைக்கு இழுத்து வம்பு செய்தார்கள்.
இவர்களைப் பெற்றெடுத்த வயிறுகள் எப்படிப்பட்டவை? யெரொபெயாம் பெத்தேலிலும், தாணிலும் நிறுவிய கன்றுகளை வணங்கி, பாகால்களைப் பின்பற்றிய ஆகாபின் வழிகளில் போய் கர்த்தருடைய கட்டளைகளுக்கு தங்களுடைய வாழ்க்கையில் முற்றுப்புள்ளி வைத்த வயிறுகள். அவர்கள் பெற்றெடுத்த செல்வங்களும் “அப்பன் வழி என் வழி” என்று கர்த்தரை நிராகரித்து பாவவழிகளைப் பிறந்த நாளிலிருந்தே பின்பற்றியவர்கள். கர்த்தரைப் புறக்கணித்த அவர்களுடைய பெற்றோர்கள் என்றுமே நல்லபுத்தி சொல்லி அவர்களை வளர்க்கவில்லை. ஆத்தும விருத்திக்கான எந்த வழிகளையும் காட்டவில்லை. பெற்றோர்களினால் ஊற்றப்பட்ட பாவப் பாலைக்குடித்து வளர்ந்து வாலிபத் திமிரில் இருதயத்தில் தேவபயம் எதுவுமின்றி அவர்கள் எலிசாவை அன்று நித்தித்தது கர்த்த ரையே நிந்தித்ததற்கு சமமானது. இருதயம் கெட்டு கர்த்தரை ஏளனப் படுத்தியவர்களை தேவகோபம் சுட்டெரிக்கத்தான் செய்யும். அதுதான் அன்று நடந்தது. பெற்றோர்களும், வாலிபர்களும் இதை உணர்ந்து இந்தக் கிருபையின் காலத்தில் ஆத்மவிருத்திக்கான காரியங்களில் தீவிரமாக ஈடுபடுங்கள். பெற்றோர்களே! உங்கள் பிள்ளைகளை தேவனுடைய வழிகளில் நடத்துங்கள். தேவகோபத்திற்கு இன்றே தப்பிக்கொள்ளுங்கள்.