பஸ்ஸில் அடிபட்டு இறந்த தெருநாயைப்
பார்த்து ஐயோ! பாவம் என்கிறார்கள் . .
தப்பு செய்துவிட்டு தாயிடம் உதைவாங்கும்
தனையனைப் பார்த்தும் ஐயோ! பாவம் என்கிறார்கள் . .
கும்பகோணத்தில் இறந்த குழந்தைகளைப்
பார்த்து ஐயோ! பாவம் என்றார்கள் . .
சுனாமியின் சீற்றத்தில் செத்து மடிந்தவர்களுக்கும்
அதே ஐயோ! பாவந்தான் . .
பாவத்தில் பிறந்து பாவத்தில் உழன்று
பாவத்தை சுமந்து வாழும் இவர்களைப்
பார்க்கப் பரிதாபமாயிருக்கிறது ஐயோ! பாவம்
– சுபி. .