செழிப்பு!
காதில் செல்போன்
காரோ மாருதி
கழுத்தில் டை
வெள்ளை சூட்
தோளில் லெப்டாப்
இத்தனை செழிப்பும்
எப்படி வந்தது
என்று கேட்டால்
சொன்னார் சகோதரர்,
“அர்த்த ராத்திரியில்
இயேசு வந்தார்
கேளு தருகிறேன்
எது வேண்டுமானாலும்
என்று சொன்னதும்
கேட்டேன் இத்தனையும்
அப்படி வந்ததுதான்
இத்தனை செழிப்பும்”
என்றார் பல்தெரிய
அந்த நாள் முதல்
இந்த நாள் வரை
அர்த்த ராத்திரியில்
கண்கள் பூக்க
கதவைப் பார்த்து
நிற்கிறேன் இயேசுவுக்காய்
என்று வரும் என் செழிப்பு?
நவீன யூதாசு!
பக்கத்தில் இருந்து
பாசத்தைக் கொட்டி
முதுகில் குத்தினான்
இஸ்காரி யோத்து
இயேசு பேர் சொல்லி
வேதத்தைப் புரட்டி
சிவனைக் காட்டுகிறான் நவீன யூதாசு