பெண்கள் இன்றைக்கு திருச்சபைகளிலும், ஸ்தாபனங்களிலும் ஊழியத்தில் ஈடுபட்டு வருவது பெருமளவுக்கு அதிகரித்திருக்கிறது. பிரசங்கம் செய்வதும், போதகராகவும், சுவிசேஷ ஊழியராகவும், உதவிக்காரராகவும் இருப்பதோடு சபைகளில் பொது ஆராதனையின்போது ஜெபிப்பதும், அறிக்கை வாசிப்பதும் பெண்கள் இன்றைக்கு செய்துவரும் செயல்களாக இருக்கின்றன. இப்படிச் செய்வதை பெண் விடுதலையாகக் கூட கிறிஸ்தவர்கள் என்று தம்மை அழைத்துக் கொள்ளுகிறவர்கள் எண்ணிக்கொண்டிருக்கிறார்கள்.
பெண்கள் இன்று சமுதாயத்தில் உயர்ந்த இடத்தில் இல்லை என்பது உண்மைதான். பணக்காரர்கள் வீட்டிலும், அந்தஸ்தில் உயர்ந்த இடத்தில் இருப்பவர்களின் வீட்டில் வேண்டுமானால் பெண்களுக்கு சில சுதந்திரங்கள் உண்டு என்று சொல்லலாம். நகர்புறங்களில் வாழ்கிற பெண்களும் சுதந்திரமாக வாழ முடிகின்றது. ஆனால், பெண் வர்க்கத்தில் இவர்கள் வெறும் மைனோரிட்டிதான். பெண் வர்க்கம் இன்றும் அடிமைத்தளையில் தான் இருந்து வருகிறது. இது தகாது என்பதை நாம் ஒத்துக்கொள்கிறோம். ஆனால், இதற்கும் திருச்சபையில் பெண்கள் வகிக்க வேண்டிய பணியைப் பற்றி வேதம் போதிக்கும் போதனைகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பது அனேகருக்குப் புரியாததுதான் விந்தையாக இருக்கின்றது. திருச்சபையில் பெண்கள் தங்களுக்கு கர்த்தரால் விதிக்கப்படாததை செய்வது அவருக்குக் அடங்காமல் நடக்கும் பெரும் பாவம் என்பதை பெண்வர்க்கம் அறியாமல் இருப்பதும் அவலம்தான். திருச்சபை, குடும்பம், சமுதாயம் என்று பிரித்து அவ்விடங்களிலெல்லாம் பெண்கள் எந்தவிதமாக நடந்துகொள்ள வேண்டும் என்பதை வேதம் தெளிவாக விளக்குகிறது. இப்படி விதித்து வைத்திருப்பவர் கர்த்தரே. கர்ததருடைய எண்ணங்கள் தூய்மையானவை. அவருடைய வழிகளைப் புரிந்து கொள்ளாதவர்கள்தான் வேதத்தை மதிக்காமல் பவுல் பெண்களுக்கு எதிரானவர் என்றும், பெண்களைப் பற்றிய வேத போதனைகள் நாம் வாழும் பண்பாட்டிற்கேற்றபடி மாற்றியமைக்கப்பட வேண்டும் என்று வேதத்துக்கு விரோதமான பாதையில் போய்க்கொண்டிருக்கிறார்கள்.
பெண்ணின் பாதுகாப்பு வளையம்
பெண்கள் திருச்பையில் இப்படித்தான் நடந்துகொள்ள வேண்டும் என்று கர்த்தர் விதித்திருக்கும் நியதி சமுதாயத்தில் அவர்கள் பக்திவிருத்தியோடும், பாதுகாப்போடும் வாழத்தான் என்பது இவர்களுக்கு புரியாமலிருக்கிறது. கர்த்தரின் விதிகளை மீறும் விசுவாசிகளான பெண்கள் சமுதாயத்தில் ஆத்மீக விருத்தியோடு வாழ முடியாததோடு, நித்திய இரட்சிப்புக்கான பாதையில் பல்வேறு இடறல்களையும் சந்திக்க வேண்டும் என்பதைத் உணர்வது அவசியம். பெண்களுக்கு நன்மை செய்கிறோம், அவர்களை மதிக்கிறோம், அவர்களுக்கு கொடுக்க வேண்டிய இடத்தைக் கொடுக்கிறோம் என்று பெண் விடுதலையை நாடும் புத்திசாலிகளாக தம்மைப் பறைசாற்றிக்கொண்டு செயல்படுபவர்கள் கர்த்தரின் கோபத்துக்குள்ளாகப் போவது உறுதி.
இந்த இதழில் (சிக்கலான சில வேதப்பகுதிகள், பக்கம் 22) போதகர் பிரெட் சீபர்ட் (Fred Siebert) பெண்கள் சம்பந்தமான போதனையை அளிக்கும் ஒரு வேதப்பகுதிக்கு விளக்கமளித்துள்ளார். அதைத் தவறாது வாசியுங்கள். அந்தப் பகுதி கர்த்தர் பெண்களுக்கு சமுதாயத்தில் எதைச் செய்வது தகும், தகாது என்று விதித்திருப்பதை விளக்குகிறது. அதை மீறுவது ஆபத் தானதும், நெருப்போடு விளையாடும் செயலுமாகும்.
பெண்களுக்கு நாம் விரோதிகளா?
பெண்கள் போதகர்களாகவும், பிரசங்கிகளாகவும் இருக்கக்கூடாது என்பதை ஒத்துக்கொள்கிற பலர், பெண்கள் வேறுபணிகளை திருச்சபையில் செய்யலாம் என்று வாதாடுகிறார்கள்; பெண்களை பல்வேறு பணிகளில் பயன்படுத்துகிறார்கள். உதாரணமாக எனக்கு தெரிந்த சில சபைகளில் பெண்கள் இன்றைக்கு பொது ஆராதனையில் பெருங்குரலெடுத்து ஜெபிக்கிறார்கள். திருவிருந்து கொடுக்கும்போது ஜெபிப்பது மட்டுமன்றி அதை விநியோகிக்கவும் செய்கிறார்கள். ஆராதனை வேளையில் சபையில் அறிக்கை வாசிக்கிறார்கள். உதவிக்காரர்களாகவும் பணிபுரிகிறார்கள். இந்தக் காரியங்களைச் செய்ய அனுமதிக்காத நம்மைப் பார்த்து பெண் விரோதிகள் என்றும், பெண்களுக்கு சுதந்திரம் கொடுக்காதவர்கள், அவர்களை அடிமைகளாக வைத்திருப்பவர்கள் என்றெல்லாம் குற்றஞ்சாட்டுவார்கள். இவர்கள் சொல்லுவதில் ஏதாவது உண்மை இருக்கிறதா என்று ஆராய்வது அவசியம்.
முதலில் பெண்களுக்கு நாம் விரோதிகளல்ல, பெண்கள் கர்த்தரின் வார்த்தைப்படி வாழ வேண்டும், கர்த்தருக்குப் பணி செய்ய வேண்டும் என்பது தான் நம்முடைய போதனைகளின் நோக்கமாக இருக்கிறது. ஆணையும், பெண்ணையும் படைத்த கர்த்தர் அவர்களை ஒரேவிதமாகப் படைக்காமல் அவர்களுக்கு மாறுபட்ட பணிகளைக் கொடுத்து அப்பணிகளை நிறை வேற்றுவதன்மூலம் தம்மை மகிமைப்படுத்தும்படி விதித்திருக்கிறார். ஆணும், பெண்ணும் அவ்விதிகளை மீறுகிறபோது கர்த்தரின் கோபத்துக்கும், தண் டனைக்குமுள்ளாவார்கள். இப்படி நாம் கூறுவது எப்படி பெண்களுக்கு விரோதமான போக்காக முடியும். பெண்களின் நலனில் அக்கறையிருப்ப தால்தான் அவர்கள் கர்த்தரின் வார்த்தையை மீறி நடக்கக் கூடாது என்று அறிவுறுத்துகிறோம். தங்களுக்கு கர்த்தர் விதித்திருக்கிற பாதுகாப்பு வளைய த்தை பெண்கள் மீறி நடக்கிறபோது அவர்கள் ஆபத்தை மட்டுமே விலைக்கு வாங்கிக்கொள்ள முடியும்.
பொதுவான போதனைகள் மட்டுமா?
கர்த்தர் நம்மைப்படைத்து இரட்சிப்பைக்கொடுத்து உங்கள் மனம்போனபடி, காலத்துக்கேற்றவிதமாக எப்படியோ வாழ்ந்து என்னை மகிமைப்படுத்துங்கள் என்று சொல்லியிருந்தால் நாம் நினைத்தபடி வாழலாம். நம்மைப் படைத்த கர்த்தர் அப்படிச் செய்யவில்லை. நமது நித்திய இரட்சிப்பில் அக்கறைகாட்டி, இந்த உலகத்தில் நாம் எங்கு, எப்படி வாழ வேண்டு¢ம் என்று தெளிவான போதனைகளைத் தந்திருக்கிறார். வேதம் பொதுவான போதனைகளை மட்டும் தருவதாக எண்ணி அறியாமையால் பலர் கர்த்தரை மீறி நடந்து வருகிறார்கள். வேதம் பொதுவான போதனை களோடு தெளிவான வரையறுக்கப்பட்ட போதனைகளையும் தருகிறது. பத்துக் கட்டளைகள் அதற்கு நல்ல உதாரணம். என்னை மட்டும் வணங்கு என்று சொல்லுகிற கர்த்தர், தன்னை எந்தவிதத்திலெல்லாம் வணங்கக் கூடாது என்றும் விதித்திருக்கிறார். தன்னை எப்படி வணங்க வேண்டும், எந்த நாளில் வணங்க வேண்டும் என்றெல்லாம் விளக்குகிறார். அதேபோல் தான் ஏனைய கட்டளைகளும் பொதுவான போதனைகளைத் தராமல் விளக்கமாக குறிப்பான கட்டளைகளாக இருக்கின்றன. இது கர்த்தர் எந்தளவுக்கு நீதியானவர், பரிசுத்தமானவர், நமது நலனில் அக்கறைகொண்டவர் என்பதையெல்லாம் காட்டுகின்றது. பிள்ளைகளைப் பெற்றுவிட்டு அவர்கள் எப்படியோ வாழ்ந்தால் சரி என்றிருக்கிற பெற்றோர்கள் உண்டு. நம் கர்த்தர் நாம் எப்படியாவது வாழ்ந்தால் சரி என்று எண்ணவில்லை. நாம் பூரணப் பரிசுத்தத்தை அடைவதற்கான அத்தனை வழிகளையும் அவர் காட்டி, அவற்றின்படி நாம் வாழ வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருக்கிறார். அவற்றை நாம் மீறுகிறபோது நல்ல தகப்பனைப்போல நம்மை அவர் தண்டிக்கவும் செய்கிறார்.
பெண்கள் ஆண்களின் தலைமைக்குக் கீழ் வாழ வேண்டியவர்கள்
கர்த்தருடைய சிருஷ்டியின் விதிப்படி பெண்கள் ஆண்களுடைய தலை மையை ஏற்று வாழ வேண்டியவர்கள்.
“ஒவ்வொரு புருஷனுக்கும் கிறிஸ்து தலையாயிருக்கிறாரென்றும், ஸ்திரீக்குப் புருஷன் தலையாக இருக்கிறான் என்றும் நீங்கள் அறிய வேண்டும்” (1 கொரிந்தியர் 11:3).
என்கிறார் பவுல். இங்கே ‘தலை’ (kephale) என்ற வார்த்தை அதிகாரத்தைக் குறித்துப் பயன்படுத்தப்பட்டுள்ளது. சரீரத்துக்கு தலை தலைமை வகிப்பது போல் நமக்கு கிறிஸ்துவும், பெண்களுக்கு ஆண்களும் இருக்கிறார்கள். அதுதான் இதற்குப் பொருள் என்பதை இந்த வசனம் அமைந்திருக்கும் பகுதியைக் கவனமாகப் படித்துப் பார்ப்பதன் மூலம் புரிந்து கொள்ளலாம். 1 கொரிந்தியர் 11:5ல் பெண்கள் தலையை மூடிக்கொள்ளாமல் ஜெபிக்கக் கூடாது என்கிறார் பவுல்.
“ஜெபம் பண்ணுகிறபோதாவது, தீர்க்கதரிசனஞ் சொல்லுகிற போதாவது, தன் தலையை மூடிக்கொள்ளாதிருக்கிற எந்த ஸ்திரீயும் தன் தலையை கனவீனப்படுத்துகிறாள்;”
இது சபை தவிர்ந்த ஏனைய பொது இடங்கள் என்பதை விளங்கிக் கொள்வதும் அவசியம். ஏனெனில், 1 கொரிந்தியர் 14:34ல் பெண்கள் சபை யில் ஜெபிக்கவோ, பேசவோ கூடாது என்பது பவுலின் கட்டளை (கர்த்தரின் கட்டளை). பெண்கள் தலையை மூடிக்கொள்ளாமலிருப்பது எந்த விதத்தில் அவர்களுடைய தலையைக் கனவீனப்படுத்துகிறது. மேலே 3வது வசனத்திலும், 4ம் வசனத்திலும் பயன்படுத்தப்பட்டுள்ள அதே வார்த்தை (‘தலை’ – kephale) இங்கேயும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த வார்த்தை மனித சரீரத்தின் தலையை அல்லாது ஆணையும், அவனுக்குக் கர்த்தர் கொடுத்துள்ள அதிகாரமுள்ள தலைமைப் பொறுப்பையும் குறிக்கிறது. ‘தலை’ என்ற இந்த வார்த்தை ‘பிரதானமான’ அல்லது ‘சட்டரீதியான அதிகாரமுள்ள’ என்ற அர்த்தத்தைக் கொண்டிருக்கிறது. இந்த 21ம் நூற்றா ண்டுவரை கிறிஸ்தவ இறையியல் அறிஞர்களும், சபைகளும் இந்த அர்த்தத்தில் மட்டுமே இந்த வார்த்தையைப் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். ஒரு சில நவீன பெண்ணிய ஆதரவாளர்கள் மட்டுமே இதற்கு முரணான விளக்கம் கொடுக்க முயற்சிக்கிறார்கள்.
ஆகவே, சபை தவிர்ந்த பொது இடங்களில் ஜெபம் பண்ணுகிறபோது, அதாவது வீட்டில் கணவனுக்கு முன் ஜெபம் பண்ணுகிறபோதோ, பேசுகிறபோதோ பெண் தனக்குத் தலைவனாக இருக்கிற கணவனுடைய அதிகாரத்துக்கு பங்கம் வராத முறையில் தன்னுடைய நிலையை உணர்ந்து நடந்துகொள்ள வேண்டும். அதேவேளை, அனைத்து விசுவாசிகளான பெண்களும் சமுதாயத்தில் எந்த நிலையிலும் ஆணின் அதிகாரமுள்ள தலைமைத்துவத்தை அவமதிக்காமல் தங்களுடைய பணிகளைச் செய்ய வேண்டும் என்பதே இந்தப்பகுதியின் பொருள். இதற்குக் காரணம் ஆண் முதலில் படைக்கப்பட்டு அவனுக்கே தலைமைத்துவத்தைக் கர்த்தர் அளித்திருக்கிறார். அதற்குப் பின்பே பெண் படைக்கப்பட்டாள் என்கிறார் பவுல். அத்தோடு பெண்ணே முதலில் வஞ்சிக்கப்பட்டாள் என்றும் பவுல் கூறுகிறார் (1 தீமோத்தேயு 2:13, 14). இந்த இரண்டு வசனங்களும் ஆதியாகமத்தில் சிருஷ்டியின்போது நிகழ்ந்த சம்பவத்தை நமக்கு நினைவுறுத்துகின்றன. முதலில் கர்த்தர் ஆணைப்படைத்து அவனை சிருஷ்டியில் உயர்ந்த இடத்தைக் கொடுத்து அனைத்தையும் தலைமை தாங்க வைத்தார். அதற்குப் பிறகு அவனுக்காக பெண்ணைப் படைத்து அவனோடு இணைந்து அமைதலோடு பணிசெய்யும்படி அவளைப் பணித்தார். கர்த்தர் தன்னைப் படைத்து தனக்குக் கொடுத்திருந்த இடத்தில் இருந்து வாழ விரும்பாமல் தன் கணவன் இல்லாத வேளையில் சுதந்திரமாக ஏவாள் எடுத்த முடிவு உலகத்துக்கு பாவத்தைக் கொண்டு வந்ததை இவ்வசனங்கள் நினைவுறுத்துகின்றன. அதன் காரணமாக ஏவாளைக் கர்த்தர் தண்டித்து பிரசவ வேத னையை அனுபவிக்கும்படிச் செய்தார். அத்தோடு பாவத்தின் காரணமாக ஆணின் தலைமைத்துவத்தை அவள் மீறும்படி நடந்து கொள்ளுவாள் என்றும் விளக்கினார். “உன் ஆசை உன் புருஷனைப் பற்றியிருக்கும். அவன் உன்னை ஆண்டு கொள்வான்” என்ற ஆதியாகமம் 3:16ல் காணப்படும் வாக்கியங்கள் இதைத்தான் விளக்குகின்றன. அதாவது, பாவத்தின் காரணமாக பெண் தான் படைக்கப்பட்டிருந்த நிலையை மறந்து ஆணின் அதிகாரத்த்தில் ஆசை கொள்வாள் என்றும், அன்பாக ஆள்வதை மறந்து பெண்ணை அடக்கி ஆளுவதை ஆண் பணியாகக் கொள்ளுவான் என்றும் இந்த வசனங்கள் சொல்லுகின்றன. ஆகவே, விசுவாசிகளான பெண்கள், விசுவாசிகளல்லாத பெண்கள் பாவத்தின் காரணமாக ஆணின் அதிகாரத் தில் இச்சைவைத்து அவனை அவமதித்து நடந்துகொள்வது போல் நடக்கா மல் அமைதலோடு வீட்டிலும், பொது இடங்களிலும், சபையிலும் நடந்து கொள்ள வேண்டுமென்கிறது வேதம்.
இன்று பெண்ணியத்தின் செல்வாக்கினால் வேதம் போதிக்கும் கர்த்தரின் இந்த சிருஷ்டியின் ஒழுங்கிற்கு ஆணாதிக்கம் என்ற தவறான பெயர்சூட்டி ஆணின் பணிகளைப் பெண்கள் செய்ய வைக்கிறார்கள் கிறிஸ்தவ சமுதாயத்தில் சிலர். பெண்கள் ஒன்றுமே செய்யக்கூடாத உதவாக்கறைகள் என்று கர்த்தர் அவர்களை ஒதுக்கி வைக்கவில்லை. அவளைத் தான் படைத்த நிலையை மீறி எதையும் செய்து தன்னை அவமானப்படுத்திக் கொள்ளக் கூடாது என்றுதான் கர்த்தர் கூறுகிறார். ஆத்மீக அறிவிலும், வளர்ச்சியிலும் ஆணுக்கு நிகராகப் பெண்ணால் வளர முடிந்தபோதும் ஆணுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிற இடத்தை அவள் ஆக்கிரமிப்பது கர்த்தரின் கட்டளைகளுக்கு எதிரான செயலாகும்.
பெண்கள் திருச்சபையில் தலைமை வகிப்பதும் பேசுவதும் தகாது
மேலே நாம் பார்த்த பெண்ணைப் பற்றிய பொதுவான போதனைகளின் அடிப்படையில்தான் பவுல் திருச்சபையிலும் பெண் கர்த்தர் ஏற்படுத்தியுள்ள அந்த விதிகளை மீறி நடந்துகொள்ளக் கூடாது என்கிறார் (1 கொரிந்தியர் 14:34, 35). விசுவாசிகளான பெண்கள் தாங்கள் பாவத்திலிருந்து விடுபட்டிருப்பதை உணர்ந்து, பாவத்தின் காரணமாக ஏற்படும் சரீர இச்சையான ஆணை அடக்கியாளும் குணத்திற்கு இடம் கொடுக்காமல் திருச்சபையில் கர்த்தர் விதித்துள்ள நியமங்களின்படி பணிபுரியும் போதகர் களுக்கும், மூப்பர்களுக்கும், உதவியாளர்களுக்கும் மதிப்பளித்து அமைதலோடு நடந்துகொள்ள வேண்டும் என்கிறார் பவுல்.
எந்தவிதத்திலும் சபையில் ஆண்களுக்கு மத்தியில் எழுந்து நின்று பேசுவதும், பாடுவதும், ஜெபிப்பதும் “அயோக்கியத்தனமானதாக” இருக்கும் என்கிறார் பவுல் (1 கொரிந்தியர் 14:35). அதாவது இப்படிச் செய்வது அவள் பலர் மத்தியில் தலைவிரிகோலமாக நிற்பதற்கு சமமானது என்கிறார். ஆவிக்குரிய காரியங்களை சபையில் பெண்கள் செய்வதில் என்ன தவறு என்று சொல்லுகிறவர்கள் பவுலின் போதனைகளை படித்து சிந்தித் துப் பார்ப்பதில்லை. ஆதியில் கர்த்தர் விதித்துள்ள நியமத்தை பவுல் விளக்கி பெண்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று விளக்குவதை அவர்கள் விளங்கிக் கொள்வதில்லை. வீணாக பவுலுக்குப் பெண்களையே பிடிக்காது என்று வேத போதனைகளை நிராகரிக்கிறார்கள்.
உண்மையில் பெண்கள் திருச்சபைகளில் எல்லோர் மத்தியிலும் பேசுவதும், போதிப்பதும், ஜெபிப்பதும், அதிகாரம் செலுத்துவதும் கர்த்தருடைய வார்த்தைக்கு முரணானது. சபையில் உள்ள ஆண்களே அத்தகைய காரியங்களை செய்ய வேண்டும். ஆண்கள் செய்ய வேண்டிய பணியை பெண்கள் செய்வதன் மூலம் கர்த்தர் ஏற்படுத்தியுள்ள தலைமையை அவர்கள் நிராகரிக்கிறார்கள். இப்படிச் செய்வது அவர்களுடைய சொந்தக் கணவர்களையும், ஏனைய ஆண்களையும் அவமதிக்கின்ற செயலாகும். இதை விளங்கிக் கொள்வது அவசியம்.
தமிழ் சபைகளில் வேதபோதனைகளில் தெளிவில்லாமல் போதகர்களாக இருக்கின்ற வர்களே இன்று பெண்கள் சபைகளில் செய்யக் கூடாததை செய்ய வைக்கிறார்கள். ஆதாம் எப்படி ஆதியில் தன் பணியிலிருந்து தவறி பாவத்துக்கு உள்ளானானோ அதேவிதமாக இன்று போதகர்களும், சபைத்தலைவர்களும் நடந்து வருகிறார்கள். ஆதியில் பெண்ணுக்கு காப்பாளனாக இருந்து அவளை வழிநடத்த வேண்டிய ஆதாம் தன் தலைமையை அவளுக்கு விட்டுக் கொடுத்து அவள் சொன்னபடி நடக்க ஆரம் பித்தான். அதுவே அவன் செய்த பாவம். கர்த்தர் தனக்கு விதித்திருந்த இடத்தை அவன் அவளுக்கு விட்டுக் கொடுத்தான். இன்று இதையே நாம் ஆண்கள் சபைகளிலும், ஸ்தாபனங்களிலும் செய்து கொண்டிருப்பதைப் பார்க்கிறோம்.
இன்று தமிழினத்தில் நூற்றுக்கணக்கான கூடில்லாக் குருவிகளான ஸ்தாபனங்களில் பெண்களே நிர்வாகிகளாக இருந்து சுவிசேஷ ஊழியத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். பிரசங்கிக்கின்ற பெண்கள் தொகையும் அதிகரித்து வருகிறது. இதெல்லாம் கர்த்தருக்கு அடங்காமல் உலக வழக்கத்தைப் பின்பற்றிப் போகும் தவறான வழியைச் சுட்டிக்காட்டுகின்றது. இப்படித்தான் இஸ்ரவேலர்கள் கானானியர்களின் வழிகளைப் பார்த்து ஆசைப்பட்டு சோரம்போனார்கள். இன்று அந்தப் பணியைப் பலர் திருச்சபைகளில் செய்து வருகிறார்கள். இதெல்லாம் இன்று நம்மினத்தில் பெண் விடுதலைக்கு அடையாளமல்ல. விசுவாசிகளான பெண்கள் வேதவார்த்தைகளை மீறி நடப்பதற்கான அடையாளமாகத்தான் இருக்கின்றன. பெண்களே! உங்களுக்கு துணை போகவேண்டிய ஆண்களே சமுதாயத்தில் உங்களுக்கு எதிரியாக இருந்து நீங்கள் வேத வார்த்தைகளுக்கு அடங்காமல் நடக்கும்படி வழி காட்டுவதை எதிர்த்து நில்லுங்கள். நித்திய இரட் சிப்பை நோக்கி நடைபோடுவதற்கு தகுந்தவிதத் தில் வேதத்திற்கு அடங்கி அமைதலோடு நடந்து கொள்ளுங்கள். ஆதியில் ஏவாள் செய்த அதே பாவத்தை தொடர்ந்து செய்து பழி தேடிக்கொள் ளாதீர்கள். உங்களைக் கறைபடுத்திக் கொள்ளாதீர்கள். கர்த்தர் உங்களுக்கு ஞானத்தைக் கொடுக்கட்டும்.
உண்மை
மிக அருமை..
ஆசீர்வாதம்.
LikeLike