விசுவாசம் எனக்கு விபச்சாரம் அல்ல
வேறு சிலர் அதைப் பயன்படுத்துவதுபோல
தேவ கிருபை என் வாழ்க்கையில் விளையாடிப்
போக்கியது என் பாவத்தை – இயேசுவின்
சிலுவைப் பணி மூலம்
விசுவாசம் – கர்த்தர் தந்த ஈவு அது!
என் சுயநலத்தின் வெளிப்பாடு அல்ல
அதன் மூலம் என் நேசரைப் பற்றிக்கொண்டேன்
அவரை நேசிக்கிறேன்; ஜீவிக்கிறேன்
விசுவாசம் என்னை உயிர்வாழ வைக்கிறது
அது என் ஜீவநாடி; உயிர்மூச்சு
விசுவாசமில்லாவிட்டால் நான் வெறும் கூடு
உயிரற்ற சடலம்;
உதிரும் காய்ந்த சருகு;
மரண ஓலமிடும் மயானம்;
விசுவாசத்தை விலைபேசி
விபச்சாரமாக்குவதற்கு
நான் என்ன விலைமாதா?
– சுபி . . .