சத்தியவேதத்திற் கின்று சுத்தமாய் மதிப்பில்லை
சிந்தித்து பயத்தோடு படிப்பாரும் யாருமில்லை
அர்த்தம் தெரியாமலதன் போதனை புரியாமல்
அழுக்குப்படாமல் வெள்ளைத் துணியில் மறைத்து
கல்லை வணங்குவதுபோல் கும்பிட்டு வரும்
கூட்டம் மட்டுந்தான் அதிகம் நம்மினத்தில்
கதவு மூடியிருந்த அறைக்குள் நுழைந்து
கர்த்தர் என்னோடு பேசினார் இன்று
பரிசுத்த வெண்ணங்கி அணிந்து வந்து
பளீரென்றடித்த வெளிச்சத்தில் நின்று
பரமன் இட்டார் கட்டளை எனக்கென
பல்லவி பாடுவோர் கூட்டமே அதிகம்
வேதம் உலகில் இல்லாத காலத்தில்
கர்த்தர் முகமுகமாய்ப் பார்த்துப் பேசினார்
தம் சித்தம் நாம் அறிய தயவாய் முன்வந்து
தானே நல்வழியும் நலமாய்க் காட்டினார்
சகலதும் கிறிஸ்துவில் சிலுவையில் முடிந்தபின்
அவர் சித்தம் எழுத்தில் நிறைவான தினிதாய்
கர்த்தரின் சித்தம் நமக்கின்று
கனவில் வருவதில்லை; நட்டநடு இரவில்
இயேசு நமக்கு தரிசனமும் தருவதில்லை
கையில் இருக்கும் வேதத்தைத் தியானித்து
கருத்தாய் ஜெபத்தோடு படித்தால் மட்டுமே
அறியலாம் நலமாக தேவ சித்தத்தை
சத்திய வேதம் காட்டாத பரிசுத்த
வழியொன்றில்லை இந்த உலகத்தில்
நாம் போக வேண்டிய நலமான பாதையை
நேசர் அதன் மூலம் நமக்குக் காட்டுவார்
ஆவியின் வழிப்படி அறிய வேண்டியதெல்லாம்
அதிலிருக்கு படியுங்கள் அருமையாய் வேதத்தை
சுபி . . .