சாக்கடைத் தண்ணீர்;
கூவத்து நீர்;
குட்டையில் தேங்கி நிற்கும்,
கருநிறத்து அழுக்கு நீர்
இத்தனைக்கும் இருக்கு – உறவு
பிரிக்க முடியாதபடி
துர்நாற்றமும், பக்கத்தில்
நெருங்க முடியாதபடி
கண்ணை மூடவைக்கும்
அசிங்கங்களின்
மொத்த வடிவமும்
மட்டுமே சொந்தம்
இம் மூன்றிற்கும்.
அவலட்சனமாய்,
அருவருப்பாய்,
இல்லாததையெல்லாம்
இருப்பதுபோல்
பேசியும், எழுதியும்
பரப்பியும் வரும்
துர்க்குணங்கொண்டோர்
இருதயத்தில் இருப்பது . .
கூவத்து நீரைவிடக்,
குளத்தில் தேங்கி நிற்கும்
சேற்றுத் தண்ணீரைவிடக்
கேவலமான
அசிங்கங்களின் மொத்த
உருவான பாவம்.
நாற்றமிகு பாவத்தில்
நலிந்து மனந்திரும்பாது
நாளும் சாக்கடைத்
தண்ணீர்போல் தேங்கி
ஊருக்கு நல்லவனாய்ப்
பாசாங்கு செய்து
‘ஊழியன்’ என்ற பெயரில்
வேஷதாரியாய் உலவும்
போலிச் சாக்கடைச்
சேறு நிறைந்த நம்மினத்தில்
தேடியும் கிடைக்குமா
குன்று மணி!
சுபி –