வாசகர்களே!

புது வருட வாழ்த்துக்கள்!

புதிய வருடத்தில் மறுபடியும் இந்த இதழோடு உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். இவ்வருடத்திற்கான இந்த முதல் இதழ் இந்தியாவில் இருப்பவர்களுக்கு சென்னையில் அச்சிடப்பட்டு அனுப்பப்பட்டிருக்கிறது. இதுவரை நீங்கள் பெற்றுக்கொண்ட இதழ்களை நியூசிலாந்தில் அச்சிட்டு அனுப்பிவந்தோம். இதற்கான விளக்கத்தை இந்த இதழில் வந்திருக்கும் “கடமை கைமாறுகிறது” என்ற ஆக்கத்தில் நீங்கள் வாசிக்கலாம்.

இவ்விதழில் முக்கியமான ஆக்கங்கள் வந்திருக்கின்றன. அத்தநேசியஸ் என்ற ஆதிசபையின் முக்கிய தலைவரைப் பற்றி டேவிட் மெரெக் எழுதிய ஆக்கத்தின் இரண்டாவது பகுதியை இதில் தந்திருக்கிறேன். அத்தநேசியஸ் எந்தளவுக்கு சபை வரலாற்றில் முக்கியமானவர் என்பதை பெரும்பாலான கிறிஸ்தவர்கள் அறிந்துவைத்திருக்கவில்லை. இந்த இரண்டாம் பகுதி சத்தியத்திற்காக அவர் அநுபவித்திருந்த இடர்பாடுகளை விளக்குவதோடு அவருடைய வாழ்க்கை மூலம் நாம் அவசியம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்களையும் சுட்டுகிறது.

மெய்கிறிஸ்தவர் ஒருவரில் நாம் காணக்கூடிய முக்கிய ஆவிக்குரிய இலக்கணம் சத்திய வைராக்கியம். சத்திய வைராக்கியத்தைச் சிறப்பானதொரு கிருபையின் ஈவாக நான் கருதவில்லை. அதுவாக அதிருந்தால் எல்லாக் கிறிஸ்தவர்களிலும் அதைக்காண வழியில்லை. அத்தநேசியஸில் காணப்பட்ட சத்திய வைராக்கியம் அவருடைய விசுவாசத்தின் அடையாளம். அதை இன்று நம்மினத்துக் கிறிஸ்தவர்களிலும், போதகர்களிலும், சபைகளிலும் அதிகமாகக் காணமுடியாமலிருப்பது நம்மத்தியில் கிறிஸ்தவம் எந்நிலையில் இருக்கிறது என்பதைத்தான் காட்டுகிறது. என்று நம்மத்தியில் சத்திய வைராக்கியமுள்ள அத்தநேசியர்களைக் காணப்போகிறோம்.

டேவிட் மெரெக் எழுதிவந்திருக்கும் “ஆவிக்குரிய வைராக்கியம்“ தொடராக்கத்தின் கடைசிப் பகுதியையும் இந்த இதழில் வாசித்துப் பயன்பெறலாம். இது வெகுவிரைவில் நூலாக வெளிவரவிருக்கிறது. இந்த இதழும் அதன் ஆக்கங்களும் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருக்க கர்த்தர் உதவ வேண்டும் என்பதே எங்கள் விருப்பமும், ஜெபமும். – ஆர்

3 thoughts on “வாசகர்களே!

  1. Dear Brother Greetings to you in our savior Lord Jesus Christ thank you for your information about given church History commentary .After i will get and inform you may god bless you and your ministry.and our church members thank you

    Like

மறுமொழி தருக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s