சத்தியத்தை சில காலம் மறைத்து வைக்கலாம்

சத்தியத்தை சில காலம் மறைத்து வைக்கலாம்; அதை மாற்றிப் போதிக்கலாம் அல்லது விற்கக் கூட முனையலாம், ஆனால் ஒருபோதும் அதை அழித்துவிட முடியாது என்பதை இப்பத்திரிகை வாசகர்கள் எமக்குத் தொடர்ந்து நினைவுறுத்தி வருகிறார்கள். சத்தியத்தை வளர்ப்பதும், அதற்காகப் போராடுவதும் நமது கடமை. அதேநேரம் அதை விற்க முனையும் போலிகளை அடையாளம் காண்பதும் நமது பணிகளில் ஒன்று. சத்தியத்தை மறைத்து, திரிபுபடுத்தி அதற்குப் புது விளக்கம் கொடுக்கும் போது அடையாளம் காணலாம். இம் மனிதரின் போதனையால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் இதனை வாசிக்க வேண்டியது அவசியம். அதேநேரம் சத்தியத்தைப் போதிக்கும் பெரும் பணிக்கு தேவ அழைப்பு எவ்வாறு வருகிறது என்று ஆராயும் ஒரு கட்டுரையையும் இவ்விதழில் காணலாம். ஊழியத்தில் ஈடுபட்டிருப்பவர்களும், ஊழியத்தை நாடுபவர்களும் சிந்தித்துப் பார்க்க வேண்டிய ஒரு தலைப்பு இது. இதுவரை வந்த இதழ்களைப்போல் இதுவும் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருக்க வல்ல தேவன் பேரருள் புரிவாராக!

ஆசிரியர்.