ஆசிரியரிடமிருந்து . . .

கிறிஸ்தவ குடும்பம் சம்பந்தமான சில ஆக்கங்களை இவ்விதழில் தந்துள்ளோம். தமிழ்க் கிறிஸ்தவ குடும்பங்கள் பல பிரச்சனைகளை எதிர்நோக்கி நிற்கும் இந்நாட்களில் இவ்வாக்கங்கள் பலருக்கும் துணைபுரியுமென்று நம்புகிறோம். குடும்பம் இன்று சந்திக்கும் பிரச்சனைகளை நுனிப்புல் மேய்வதுபோல் மேலெழுந்தவாரியாகப் பார்க்காது, அதனை ஆழமாக ஆராய்ந்து உண்மைக் காரணங்களை சரிவர உணர்ந்து, அவற்றிற்கு வேதபூர்வமான விமோசனம்காண வேண்டியது ஒவ்வொரு கிறிஸ்தவ குடும்பத்தினதும் கடமை. இதனையே இவ்வாக்கங்கள் கருத்தில்கொண்டு ஆராய்கின்றன. குடும்பம் ஒரு ஆலயம் இவ்விதழில் இருந்து, தொடராக மலர்ந்து கிறிஸ்தவ குடும்பத்தின் பல அம்சங்களையும் ஆராயவிருக்கிறது. குடும்ப ஆராதனை  இல்லாத குடும்பங்கள் கிறிஸ்தவ குடும்பமாக அமைந்து தேவாசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ள முடியாது. குடும்ப ஆராதனை இன்று ஒவ்வொரு குடும்பத்திற்கும் அவசியம். ஜே. சி. ரைலின் சிறந்த பிள்ளை வளர்ப்பு நூல் பற்றி எழுதியிருக்கிறோம். அது அனைவரும் வாசிக்க வேண்டிய அருமையான நூல். ஆகவே, மொத்தத்தில் இவ்விதழ் ஒரு குடும்பமலராக மலர்ந்திருக்கிறது.

Continue reading

குடும்பம் ஒரு ஆலயம்

இன்று சிதைந்து, சீரழிந்து கொண்டிருக்கும் குடும்பத்தைப் பிடித்துள்ள சாபக்கேட்டிலிருந்து அதை விடுவிப்பதெப்படி? இதற்கான வேதபூர்வமான விளக்கத்தை இத்தொடர் அளிக்கிறது.

குடும்பம் ஒரு ஆலயம்

குடும்பம் ஒரு ஆலயம் என்று கூறி குடும்பத்தை ஆலயத்திற்கு ஒப்பிட்டு நமது பெரியோர்கள் பேசியுள்ளார்கள். தேவனை அறியாத மக்கள் மத்தியிலும் குடும்பத்தின் பெருமை உணரப்பட்டு அதற்கு எப்போதுமே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. சங்ககாலத் தமிழ் இலக்கியங்களிலும் குடும்பத்தின் பெருமையைப் பற்றி வாசிக்கலாம். வள்ளுவர்கூட தன் நூலில் அதற்குப் பல அதிகாரங்களை ஒதுக்கியுள்ளார். இருந்த போதும், வேதம் மட்டுமே குடும்பம் என்றால் என்ன? அது எப்படி இருக்க வேண்டும்? என்று அதிகாரத்துடன் கூறக்கூடிய உலகிலுள்ள ஒரே நூலாக இருக்கின்றது. தேவனை அறியாத மனிதர்களுக்கும் குடும்பத்தைப்பற்றிய அறிவைத் தந்துள்ள ஒரே நூல் வேதமே.

Continue reading

சீர்திருத்த விசுவாசம்! – இயன் மரே

இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கும் விசுவாசிகளைக் குறிப்பதற்காக கிறிஸ்தவர்கள் என்ற வார்த்தையைத் தவிர வேறு பெயர்களைப் பயன்படுத்த வேண்டிய நிலைமை குறித்து நமக்கு கவலை ஏற்பட்டாலும், அத்தகைய வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டிய நிர்ப்பந்தத்தை சபை வரலாற்றில் தோன்றிய மாற்றங்கள் ஏற்படுத்தியுள்ளன. இன்றைய சூழலில் இது மிகவும் உண்மையானதாகும். ஏனெனில், இன்று கிறிஸ்தவர்கள் என்று தம்மை அழைத்துக்கொள்ளும் பலர், கிறிஸ்துவின் வார்த்தைக்குக் கட்டுப்பட்டு நடக்காமலும், அவரது மந்தையைச் சேர்ந்தவர்களாகத் தம்மை நிருபித்துக்காட்ட முடியாமலும் இருப்பது (யோவான் 10) கிறிஸ்தவர்களைக் குறிக்க வேறு பெயர்களைப் பயன்படுத்த வேண்டிய அவசியத்தை ஏற்படுத்துகிறது.

Continue reading

1689 விசுவாச அறிக்கை

திரித்துவம்
அதிகாரம் 2: பாகம் 1
விளக்கம்: அலன் டன்

இவ்விதழில் 1689 விசுவாச அறிக்கையின் இரண்டாம் அதிகாரம் திரித்துவத்தைப்பற்றி அளிக்கும் போதனைகளைப் பார்ப்போம்.

பத்துக்கட்டளைகளின் முதலிரண்டு கட்டளைகளையும் நாம் விசுவாசத்துடன் பின்பற்றுவதிலேயே வேத ஒழுக்கவியல் தங்கியிருக்கின்றது (யாத்தி. 20:3-6). வேதமும், வரலாறும் மனிதனின் மிகப்பெரும் பாவமாக அவனுடைய உருவ வழிபாட்டையே சுட்டிக்காட்டுகின்றன. பாவியாகிய மனிதனால் தனக்குள் காணப்படும் அடிப்படையான ஆராதிக்கும் உணர்வுகளை அடக்கிவைக்க முடியாது. அவன் அவ்வுணர்வுகளை வெளிப்படுத்தியே ஆக வேண்டும். பவுல், பத்துக்கட்டளைகளின் இரண்டாம் கட்டளையின் வார்த்தைகளைப் பயன்படுத்தி, “தேவனுடைய சத்தியத்தை அவர்கள் பொய்யாய் மாற்றி, சிருஷ்டிகரைத் தொழுது சேவியாமல் சிருஷ்டியைத் தொழுது சேவித்தார்கள்” என்று கூறுகிறார் (ரோமர் 1:25). மனிதனால், படைத்தவரை அவருடைய படைப்பிலிருந்து பிரித்துவிட முடியாது. ஆனால், அவன் அதைப் பொய்யாக்கும் முயற்சியில் ஈடுபடலாம். தேவனின் சாயலில் தேவனால் படைக்கப்பட்ட சிருஷ்டியாகிய மனிதன், தேவனின் சாயலில் ஒரு கடவுளைத் தோற்றுவிக்கிறான். பிசாசின் பொய்களின் வழியில் சென்று உருவங்களை ஏற்படுத்தி அவற்றைக் கடவுளாகக் கருதுகிறான். அவன் போலியான விசுவாசத்துடனும், தன்னலமும், பெருமையும் கொண்டு, தேவனுக்கு எதிராக மேலும் மேலும் உருவங்களை ஏற்படுத்தி வழிபடுகின்றான். மனிதன் பாவத்தில் வீழ்ந்த நாட் தொடக்கம், இஸ்ரவேலரின் வரலாற்றிலும், உலகத்தின் எல்லா மக்களின் கலாச்சாரங்களிலும் மனிதனின் அடிப்படையான பாவமாக உருவ வழிபாடே காணப்படுகின்றது.

Continue reading

சிறந்த பிள்ளை வளர்ப்பு

பிள்ளை வளர்ப்பின் அவசியத்தை உணராத குடும்பங்கள் இருக்கமுடியாது. தங்களுடைய பிள்ளைகள் நாம் தலை நிமிர்ந்து நடக்கக்கூடிய விதத்தில் நடக்க வேண்டும் என்பதுதான் ஒவ்வொரு பெற்றோரினதும் கனவாக இருக்கின்றது. ஆனால், வெறும் கனவும், ஆசையும் மட்டும் பிள்ளைகளை நல்ல முறையில் வளர்த்துவிடாது. பிள்ளை வளர்ப்பில் தமது பொறுப்புக்களை உணர்ந்து அதற்கான நடவடிக்கைகளை எடுக்காத பெற்றோர்கள் தேவனின் ஆசீர்வாதத்தைத் தங்களுடைய குடும்பங்களில் காண முடியாது.

பிள்ளை வளர்ப்பின் அவசியத்தைக் குறித்தும், அதற்காகப் பெற்றோர்கள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் நல்ல ஆலோசனைகளை ஜே, சீ. ரைல் தனது “சிறந்த பிள்ளை வளர்ப்பு” என்ற நூலில் வழங்கியுள்ளார். சென்னையைச் சேர்ந்த தமிழ் பாப்திஸ்து வெளியீடுகள் நிறுவனம் இதனை ஆங்கில மூலத்திலிருந்து (The Duties of the Parents) தமிழில் மொழி பெயர்த்து ஐம்பது பக்கங்களில் வெளியிட்டுள்ளார்கள்.

Continue reading