1689 விசுவாச அறிக்கை

கடவுளின் ஆணை

அதிகாரம் 8 – பாகம் 2

விளக்கம்: லமார் மார்டீன்

நாம் இப்போது கடவுளின் ஆணையைப் பற்றி விசுவாச அறிக்கை தரும் போதனைகளின் இரண்டாம் பாராவைக் கவனிப்போம். சிலர் கடவுள், நடக்கப்போகிற எல்லாவற்றையும் முன்கூட்டியே அறிந்திருப்பதால்தான் அவரால் எல்லாவற்றையும் ஆணையிட முடிகிறது என்று கூறுவர். கடவுள், எதிர்காலத்தில் மனிதன் எதைச் செய்யப் போகிறான் என்று உற்று ‍நோக்கிப் பார்த்து, அவ்வறிவின் அடிப்படையிலேயே தனது ஆணைகளையிட்டார் என்று இவர்கள் கூறுவர். இந்தவிதத்திலேயே கடவுளின் ஆணைகளுக்கு இவர்கள் விளக்கம் கொடுக்கிறார்கள். பெலேஜியன், ஆர்மீனியன் கோட்பாடுகளைப் பின்பற்றுபவர்கள் இவ்வாறே சிந்திக்கிறார்கள். பதினேழாம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த பாப்திஸ்துகளில் சிலரும் இவ்வாறே சிந்தித்தனர் (General Baptist). இன்று கிறிஸ்தவ உலகில் இதைத் தவறாகத் தொடர்ந்து நம்பிக் கொண்டிருக்கிறவர்கள் அநேகர். இரண்டாவது பாரா என்ன செல்கிறது என்று முதலில் பார்ப்போம்.

Continue reading