தமிழ் மக்கள் மத்தியில் கிறிஸ்தவம்

தமிழ் மக்கள் மத்தியில் கிறிஸ்தவம் இன்று இருக்கின்ற நிலையைப் பார்த்து வருந்தாத வேதமறிந்த ஆத்துமா இருக்க முடியாது. வேதம் தெரியாது, சபை என்ற பெயரில் நடக்கும் சடங்குகளுக்கு பலியாய்ப் போனவர்களுக்கும், உணர்ச்சிகளுக்கு அடிமையாய்ப் போனவர்களுக்கும் இந்த வருத்தம் தெரியாது. சபை வரலாற்றில் ஒரு இருண்ட காலத்தைக் குறித்து வாசிக்கிறோம். சத்தியப் பஞ்சமும், வசன வரட்சியும் இருந்த காலமது. கர்த்தர் தம் மக்களைவிட்டு விலகிப்போனதுபோல் காணப் பட்ட காலமது. அத்தகையதொரு இருண்ட காலத்தில் தமிழ் கிறிஸ்தவம் இன்று இருந்துவருகிறது. எசேக் கியல் 34-ல் நாம் வாசிப்பதுபோல் சபைத் தலைவர் கள் மந்தையை மேய்க்காமல் தங்களை மேய்த்துக் கொண்டும், ஆடுகளை மோசம் செய்து குடும்ப ஊழி யம் நடத்தி சமுதாயத்தில் உயர்ந்த இடத்தில் இருந்து வருகிற காலமிது. கத்தோலிக்க மதமும், அதற்கு அனுசரனையாக இருக்கும் பாரம்பரிய சபைகளும், பெந்தகொஸ்தே மாயமானும் கிறிஸ்தவ அரிதாரம் பூசி சமுதாயத்தை ஏய்த்து வருகிற காலமிது. இஸ்ரவேலில் இராஜா இல்லாததால் தனிஊழியம், சொந்த ஊழியம் என்று ஊழியத் தகுதி இல்லாதவர்கள் எல்லாம் கடை நடத்தி வரும் காலமிது. வாசிப்பதற்கு நல்ல பயனுள்ள நூல்கள் அருகிக் காணப்படும் காலமிது. சபை வரலாற்றில் 16-ம் நூற்றாண்டுக்கு முற்பட்ட இருண்ட காலத்தைப் பிரதிபலித்து தமிழினத்தின் மத்தியில் கிறிஸ்தவம் இன்று இருந்து வருகிறது. பொதுக் கல்வி அறிவிலும், தொழில் நுட்பத்திலும், சமுதாய ஏணியிலும் உயரப் போய் என்ன பயன்? சாதியையும், சடங்கையும், மூடநம்பிக்கைகளையும், சிந்திக்க மறுக்கும் மனதையும் வளர்த்துக் கொண்டு ஆத்தும விருத்தியில் அடிமட்டத் தில் இருந்து வருகிறது தமிழ் கிறிஸ்தவம். “இரவிலே வாங்கினோம் சுதந்திரம், இன்னும் விடியவே இல்லை” என்று ஒரு தமிழ்க் கவிஞன் இந்திய நாட்டின் நிலை பற்றிப் பாடினான். தமிழ் கிறிஸ்தவத்திற்கு விடிவு காலம் எப்போது வரும்? என்று என்னால் ஆதங்கத் தோடு கேட்காமல் இருக்க முடியவில்லை. வேதபூர்வ மான சபைகளும், தம்மை வளர்க்காமல் மந்தையை நேசிக்கும் போதகர்களும், பிரசங்கத்திலும் வசனத் திலும் தீவிர ஆர்வம் காட்டும் ஆத்துமாக்களும் நம்மினத்தில் மட்டும் அருகிக் காணப்பட வேண்டுமா? என்று என்னால் எண்ணிப் பார்க்காமல் இருக்க முடிய வில்லை. லூதரும், கல்வினும், எட்வர்ட்சும், ஸ்பர்ஜனும் நம்மினத்திலும் தோன்ற வழி ஏற்படாதா? என்று என்னால் ஏங்காமல் இருக்க முடியவில்லை. இந்த ஏக்கம் ஆனந்தத்தில் என்று போய் முடியும்?