முதல் கோணல், முற்றும் கோணல்

சமீபத்தில் ஒரு ஆங்கிலக் கட்டுரையில் நான் ஆதியாகமத்தைப் பற்றிய ஒரு விஷயத்தை வாசிக்க நேர்ந்தது. அதை எழுதியவர் ‘ஆதாமும். ஏவாளும் இல்லை என்றால் நாம் பிரசங்கிப்பதற்கு சுவிசேஷம் இருக்க வழியில்லை’ என்று Christianity Today என்ற பத்திரிகையில் வந்த ஒரு தலைப்பைச் சுட்டிக்காட்டி எழுதியிருந்தார். வரலாற்று ஆதாமையும் (Historical Adam), கர்த்தர் அவனோடு ஏற்படுத்திக்கொண்ட உடன்படிக்கையையும், அவனே மானுடத்தின் பிரதிநிதி (Federal headship) என்பதையும் இன்று நேற்றில்லாமல் அடிப்படை நம்பிக்கைகளாகக் கொண்டமைந்ததே வேதபூர்வமான கிறிஸ்தவம். இவற்றை நிராகரிப்பதோ அல்லது இவற்றிற்கு மாறான வேறு விளக்கங்களைத் தருவதோ அடிப்படைக் கிறிஸ்தவ நம்பிக்கைகளை அடியோடு சிதைத்துவிடும். ஆதியாகமத்திற்கு புது விளக்கம் கொடுக்கும் வழக்கம் காலங்காலமாக இருந்து வந்திருக்கிறது. ஒவ்வொரு காலப்பகுதியிலும் புதுவிளக்கங்களைக் கொடுக்கிறவர்கள் எப்படியோ உருவாகிவிடுகிறார்கள்; கிறிஸ்தவர்களைத் திசைதிருப்பப் பார்க்கிறார்கள்.

Continue reading