2020

மறுபடியும் அஞ்சரைப்பெட்டிக்குள்

அஞ்ஞரைப்பெட்டியைத் திறந்து பார்த்து சில வருடங்களாகி விட்டது. காலங்கள் கடந்துபோக வாழ்க்கையில் நாம் கேட்பதும், வாசிப்பதும், பிறரோடு பழகும் அனுபவத்தில் கிடைப்பதும் அதிகரித்துக்கொண்டே போகின்றன. எத்தனையோ விஷயங்கள் அவசியமில்லாதவையாகிவிடுகின்றன. அவற்றையெல்லாம் மனமாகிய அஞ்ஞரைப்பெட்டிக்குள் நாம் சேர்த்து வைப்பதில்லை. [மேலும் வாசிக்க இங்கே அழுத்தவும்]

திருச்சபை வரலாற்றில் ஒரு பொற்காலம்: பியூரிட்டன்களும் பியூரிட்டனிசமும்

சமீபத்தில் 17ம் நூற்றாண்டு பியூரிட்டன் பெரியவர்களைப்பற்றி நான் ஒரு செய்தியில் விளக்கவேண்டியிருந்ததது. நம் இனத்து கிறிஸ்தவர்களுக்கு அவர்களைப்பற்றி அதிகம் தெரியாமல் இருந்தால் அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. திருச்சபை வரலாறுபற்றி இதுவரை இரண்டு நூல்களை வெளியிட்டிருக்கிறேன். மூன்றாவது இந்தப் பியூரிட்டன்களைப்பற்றியதாக இருக்கும். அதை எழுதும் முயற்சியை ஆரம்பித்திருக்கிறேன். அதை வேகமாக எழுதி வெளியிட கர்த்தரையே நம்பியிருக்கிறேன். அது வெளிவரும்போது நிச்சயம் அநேகருக்கு பலனுள்ளதாக இருக்கும். [மேலும் வாசிக்க இங்கே அழுத்தவும்]

ஒரு சகாப்தம் மறைந்தது – ஜே. ஐ. பெக்கர் 1926-2020

ஜே. ஐ. பெக்கர்

கடந்த வாரம் சனிக்கிழமை நான் என்னுடைய வழமையான உடற்பயிற்சிக்கான ஆறு கிலோமீட்டர் ஒட்டத்தை முடித்துவிட்டு வீடு திரும்பியபோது நண்பரொருவரின் இமெயில் ஒன்று ஜிம் பெக்கர் மறைந்துவிட்டார் என்ற செய்தியைக் கொண்டுவந்தது. இன்னுமொரு இவென்ஜலிக்கள் இறையியலறிஞர் இறைபதம் அடைந்துவிட்டார். ஜிம் பெக்கர் என்றும், ஜே. ஐ. பெக்கர் (J. I. Packer) என்றும் கிறிஸ்தவ உலகில் பலராலும் அறியப்பட்டிருந்தார் ஜேம்ஸ் பெக்கர்.  [மேலும் வாசிக்க இங்கே அழுத்தவும்]

கோவிட்-19: ‘இதையும் சிந்திக்காமல்’

இப்போதெல்லாம் அடிக்கடி நம் பேச்சில் வந்துபோகும் வார்த்தைகள் ‘புதிய வழமை’ (New normal) அதை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறோம் என்றும், அது எப்படியெல்லாம் இருக்கப்போகிறதென்றும் அடிக்கடி மீடியாக்கள் யூகம் செய்து அறிவித்துக்கொண்டிருக்கின்றன. இந்த வார்த்தைப்பிரயோகம் புதிய அகராதிகளில் நிச்சயம் இணைந்துகொள்ளும். [மேலும் வாசிக்க இங்கே அழுத்தவும்]

ஆளுகிறவர் எச்சரிக்கிறார், ஜாக்கிரதை! – கோவிட்-19

இது கோவிட்-19ன் காலம்! படுக்கப்போகும் நேரத்தில் இருந்து காலையில் கண்விழிக்கும்வரை அதுதானே நினைவில் இருக்கிறது. அடுத்து என்ன நடந்திருக்கிறது என்று நானும் பாக்ஸ் நியூசில் (Fox news) இருந்து எல்லா ஆங்கிலச் செய்திகளையும் ஒரு நாளில் இரண்டு தடவைகளாவது பார்த்துவிடுகிறேன்.  [மேலும் வாசிக்க இங்கே அழுத்தவும்]

கொரோனாவும் வீட்டுச்சிறைவாசமும்!

கொரோனா வைரஸ் வெகுவேகமாக உலகெங்கும் பரவி வருகிறது. இத்தாலி, ஸ்பெயின் ஆகிய ஐரோப்பிய நாடுகளில் உயிர்ச்சேதம் அதிகம். இந்த நாடுகள் எப்போதோ முழு தேசத்தையும் ஆள்நடமாட்டமில்லாதவகையில் கட்டுப்பாடுகளைக் கொண்டுவந்திருக்கின்றன.  [மேலும் வாசிக்க இங்கே அழுத்தவும்]

————————————————————————————————————————

போதகர் பாலா அவர்கள் நியூசிலாந்திலுள்ள சவரின் கிறேஸ் சபையில் கடந்த 33 வருடங்களாக போதகராக பணிபுரிந்து வருகிறார். பல்கலைக் கழக பட்டதாரியான இவர் தென் வேல்ஸ் வேதாகமக் கல்லூரியில் (South Wales Bible College, Wales, UK) இறையியல் பயின்றவர். பலரும் விரும்பி வாசிக்கும் திருமறைத்தீபம் காலாண்டு பத்திரிகையின் ஆசிரியராகவும் அவர் இருந்து வருகிறார். அத்தோடு, அநேக தமிழ் நூல்களை அவர் எழுதி வெளியிட்டுக் கொண்டிருப்பதோடு, ஆங்கில நூல்களையும் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டு வருகிறார். இவருடைய தமிழ் பிரசங்கங்கள் ஆடியோ சீ.டீக்களில் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. கடவுளின் வசனத்தை எளிமையான பேச்சுத் தமிழில் தெளிவாகப் பிரசங்கித்து வருவது இவருடைய ஊழியத்தின் சிறப்பு.

மறுமொழி தருக