வாசகர்களே!

வணக்கம் வாசகர்களே! இவ்வருடத்திற்கான முதல் இதழைப் பூர்த்தி செய்து உங்கள் முன் படைக்க கர்த்தர் உதவியிருக்கிறார். வழமைபோல் இதழைத் தயாரிப்பதில் துணைபுரிந்திருக்கும் அனைவருக்கும் என் நன்றிகள்.

இந்த இதழில் பிரசங்கம் எப்போதும் தயாரித்தே செய்யப்பட வேண்டும் என்பதை விளக்கும் ஒரு ஆக்கத்தைத் தந்திருக்கிறேன். அதை ஆடியோவில் இருந்து எழுத்தில் பதிவு செய்து சகோதரன் சிவா உதவியிருக்கிறார். தயாரித்துப் பிரசங்கம் செய்வது எப்படி என்பதை இந்த ஆக்கம் விளக்கும்; பிரசங்கம் செய்பவர்களுக்கும், கேட்பவர்களுக்கும் அது தெரிந்திருக்க வேண்டிய உண்மை.

விதை நிலங்களின் உவமையில் முதலாவது நிலத்தை விளக்கும் ஒரு ஆக்கமும் இதில் வந்திருக்கிறது. அதையும் சிவாவே எழுத்தில் பதிவு செய்து உதவினார். இந்த ஆக்கமும் உங்களைச் சிந்திக்க வைக்கும். உவமைகளை எவ்வாறு புரிந்துகொள்ளுவது என்பதையும் இது கற்றுத் தரும்.

நமது இதழ் 2024ல் முப்பதாவது வருடத்தை ஆரம்பிக்கிறது. இத்தனை வருடங்களைக் கடந்து வந்திருப்பதைத் திரும்பிப் பார்க்கிறபோது அது வெறும் மனித முயற்சியாக எனக்குத் தெரியவில்லை. கர்த்தர் ஒருவரோடிருந்தால் மட்டுமே அது ஆகக்கூடியது. இம்மட்டும் கர்த்தர் இந்த இலக்கியப்பணியில் எங்களை வழிநடத்தி அநேகருக்குத் துணை செய்திருக்கிறார். இதழால் பயன்பட்டு வரும் நண்பர்களுக்கும், வாசகர்களுக்கும் உங்கள் ஆதரவுக்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

“அறியப்படாத கிறிஸ்தவம்” எனும் ஒரு நூலை விமர்சித்து எழுதியிருக்கிறேன். கத்தோலிக்கம் சார்பான இந்நூல் கிறிஸ்தவ ஊழியங்கள் பற்றிய சில விபரங்களையும் தருகிறது.

தோமா கிறிஸ்தவம் நூலுக்கான கருத்துரையை சகோதரி ஷேபா மிக்கேள் ஜோர்ஜ் எழுதியிருக்கிறார். அவருடைய எழுத்துத் திறன் இதில் வளர்ந்திருப்பதைக் காண்கிறேன்.

இந்த இதழும் இதுவரை வந்திருக்கும் இதழ்களைப் போலவே உங்களுக்கு ஆசீர்வாதமாக இருக்க கர்த்தர் துணைபுரியட்டும். வாசகர்கள் அனைவருக்கும் என்னுடைய புத்தாண்டு வாழ்த்துக்கள்! – ஆசிரியர்

3 thoughts on “வாசகர்களே!

  1. சஞ்சிகை எங்கே அச்சிட படுகிறது. நான் pod முறையில் சென்னையில்
    அச்சிடுகிறேன்… அதில் தேவையா பிரதிகள் அச்சிட முடிந்தது. செலவு குறைவு.

    Like

    • சஞ்சிகை நல்ல முறையில் POD யில் சென்னையில் பிரபலமான அச்சகமொன்றில் அச்சிடப்படுகிறது. அதன் அச்சுத்தரம் குறையாமல் இருக்கப் பார்த்துக்கொள்ளுகிறோம்.

      Like

  2. கர்த்தருக்கு மகிமை! உங்களுக்காக அவரை துதிக்கிறோம்! ஆவலுடன் எதிர்பார்க்கும் பத்திரிகை ஆகும்.ஏன் என்றால் திருமறை தீபம் நல்ல சீர்திருத்த கிறிஸ்தவ பத்திரிகை என்றால்
    மிகையாகாது.

    Like

மறுமொழி தருக