வணக்கம் வாசகர்களே! இது இந்த வருடத்திற்கான முதலாவது இதழ். ஒவ்வொரு இதழையும் தயாரிக்க உதவி வந்திருக்கும் ஆண்டவர் இதைத் தயாரிக்கவும் உதவியிருக்கிறார். என்னோடு இணைந்து இந்தப் பணியி¢ல் ஆர்வத்தோடு உழைத்து வருகின்ற நண்பர்களுக்காக என் நன்றி! முக்கியமாக புது வருட வாழ்த்துக்களை எல்லோருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன். தேவன் இந்த வருடத்தி¢ல் நம்மெல்லோரையும் வழிநடத்தித் தன்னுடைய மகிமைக்காகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென்பதே என் ஜெபம்.