2 இராஜாக்கள் 2:19-22
இந்த வேதப்பகுதியில் தேவனுடைய கிருபை எவ்வாறு சபிக்கப்பட்ட எரிகோவை வந்தடைந்தது என்பதை நாம் ஆராயவிருக்கிறோம். ஆங்கிலத்தில் அநேக நல்ல கீர்த்தனைகள் இருக்கின்றன. அதில் ஒன்று Grace it’s charming sound என்பதாகும். தமிழில் மொழிபெயர்த்தால்,
“கிருபை இனிய சத்தம் காதுக்கு இணக்கமானது,
போதுமானது கிருபை,
ஒருபோதும் வல்லமை இழக்காதது,
கிறிஸ்து எனக்குள் ஜீவிக்கிறார்,
எடுக்க எடுக்க குறையாத தன்மையோடு.”