யோராம்: ஆகாபைப்போல அல்ல; ஆனால் . . . !

2 இராஜாக்கள் 3:1-12

பழைய ஏற்பாடு ஒரு அருமையான வேத நூல். அது ஆண்டவரைப் பற்றி வரலாற்றின் மூலமாக அருமையான போதனைகளை நமக்குக் கொடுக்கிறது. பழைய ஏற்பாட்டில் வரலாற்று நிகழ்ச்சிகளின் மூலம் அருமையான காட்சிகளை நாம் பார்க்கிறோம். அது மிகவும் மன எழுச்சியைக் கொடுக்கின்ற ஒரு நூலாக இருக்கிறது. பஞ்சவர்ணக்கிளியின் உடலில் பலவிதமான வர்ணங்கள் காணப்படுவதைப் போல பழைய ஏற்பாட்டில் ஆண்டவரின் செயல்களைப் பற்றியும், அவருடைய குணாதிசயங்களைப் பற்றியும், அவருடைய ஞானத்தைப் பற்றியும் நாம் அறிய முடிகிறது; அதிகமான நடைமுறைப் பயன்பாடுகளையும் அது நமக்குக் கற்றுக்கொடுக்கின்ற நூலாக இருக்கிறது. பழைய ஏற்பாட்டில் இந்த 2 இராஜாக்கள் நூலில் இதுவரை பார்த்து வந்துள்ள வேதப் பகுதிகளைக் கவனிக்கின்றபோது அவை அருமையான வேத சத்தியங்களை உள்ளடக்கியதாக இருந்துள்ளதைக் கண்டிருக்கிறோம். இந்த ஆக்கத்தில் 2 இராஜாக்கள் 3:1-12 வரையுள்ள வசனங்களை நாம் ஆராய்ந்து பார்ப்போம்.

Continue reading