கேள்வி 27: கிறிஸ்து அரசராக எவ்வாறு பணி புரிகிறார்?
பதில் : கிறிஸ்து எம்மைத் தம் கீழ் கொண்டுவருவதன் மூலமும், எம்மை ஆண்டு பாதுகாபபதன் மூலமும், அவருதும் எமதுமான எதிரிகளை அடக்கி வெற்றி கொள்வதன் லமும் அரசராகப் பணி புரிகிறார்.
(சங்கீதம் 110:2-3; ஏசாயா 33:22; 1 கொரிந்தியர் 15:25)
விளக்கக்குறிப்பு:
ஒரு போரசின் அரசராக இயேசு கிறிஸ்து இருக்கிறார் என்ற திருமறை போதிக்கும் பேருண்மையை இவ்வினாவிடை விளக்குகின்றது. கிறிஸ்து சிலுவையிலே அறையப்பட்டபோது ‘இவன் யூதருடைய ராஜாவாகிய இயேசு’ (மத்தேயு 27:37; மாற்கு 15:26; லூக்கா 23:38; யோவான் 19:19) என்ற வார்த்தைகள் அச்சிலுவையில் பொறிக்கப்பட்டிருந்தன. துர்க்குணம் உடையவர்கள் இதைப்பயன்படுத்தி கிறிஸ்துவை அவமதிக்க முனைந்தபோதும் இவ்வுண்மையை கிறிஸ்துவை அவமதிக்க முனைந்தபோதும் இவ்வுண்மையை இவ்விதமாக வெளிப்படுத்துவதும் கடவுளின் திட்டமாகவிருந்தது. சங்கீதக்காரன் 2 ஆம் சங்கீதத்தில் இதனையே முன்னுரைக்கிறான். பேதுரு அப்போஸ்தலர் 4:25 இல் இதையே உறுதிப்படுத்துகிறான். சிலுவையில் இறந்து கொண்டிருந்த கள்வனும் இயேசுவை நோக்கி, ‘ஆண்டவரே,நீர் உம்முடைய ராஜ்யத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும்’ என்று இதனையே குறிப்பிட்டுக் கூறினான். இயேசு அவனுக்கு பதிலளிக்குமுகமாக அவனை நோக்கி, ‘இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்கிறேன் என்றார்’. (லூக்கா 23:42, 43) ஆகவே, கிறிஸ்து ஒரு பேரரசிற்கு அரசராக உள்ளார் என்ற உண்மையை ஆராய்வோம்.