கிறிஸ்தவன் யார்? என்ற கேள்விக்கு அனேகர் விதவிதமான பதில்களை அள்ளித் தெளித்துக் கொண்டிருக்கும் இக்காலத்தில் அக்கேள்விக்கான வேதபூர்வமான பதிலைத் துல்லியமாகத் தருகிறார் அல்பர்ட் என். மார்டின்.
நமது அறிவீனத்தின் காரணமாகவும், அக்கறையற்ற தன்மையின் காரணமாகவும் நமக்கு எந்தவிதமான பாதிப்பையோ அல்லது ஆபத்தையோ விளைவிக்கக் கூடாத பல காரியங்கள் இருக்கத்தான் செய்கின்றன. ஒரு மண்ணிறத்து மாடு பச்சைப் புல்லைத்தின்று வெள்ளை நிறத்தில் எப்படிப் பாலைத் தருகிறது? என்பதற்கான விளக்கத்தைக் கொடுக்கக் கூடியவர்களும் நிச்சயமாக நம்மத்தியில் இருக்கவே செய்கின்றனர். நம்மில் அனேகருக்கு ஐன்ஸ்டைனின் கோட்பாட்டைப்பற்றி அடியோடு ஒன்றுமே தெரியாது. ஆனால், அதை விளக்கும்படி யாராவது நம்மை வற்புறுத்தினால் நம்பாடு கஷ்டம்தான். ஐன்ஸ்டைனின் கோட்பாட்டைப்பற்றி நமக்கு ஒன்றும் தெரியாதது மட்டுமல்ல, அதைப்பற்றி நாம் அக்கறை கொள்வதுமில்லை. இருப்பினும், அதைப் பற்றிய நமது அறிவீனமோ, அக்கறைக்குறைவோ அத்தனை பாரதூரமானதோ, ஆபத்தானதோ அல்ல.