விசுவாசத்தின் மூலம் சுகமளிக்கிறேன் என்று தன்னைப் பிரபல்யப்படுத்திக் கொள்ளும் எந்த ஒரு தனி மனிதன் மூலமும் (பெனிஹின், ஜோண் விம்பர், தினகரன் போன்றோர்) கர்த்தர் இன்று அற்புதங்கள் செய்வதில்லை, சுகமளிப்பதில்லை என்று நாம் சொல்வதைக் கெரிஸ்மெட்டிக் கூட்டம் தவறாகப் புரிந்து கொள்வது வழக்கம். இத்தனி மனிதர்களைப் பயன்படுத்திக் கர்த்தர் அற்புதங்கள் செய்வதில்லை என்றுதான் நாம் சொல்கிறோமே தவிர, கர்த்தர் அற்புதங்கள் செய்வதில்லை, சுகமளிப்பதில்லை என்று நாம் சொல்லவில்லை. தனது சித்தத்தை வார்த்தையின் மூலம் வெளிப்படுத்திய கர்த்தர் அவ்வார்த்தை எழுத்தில் முழுமையாகக் கொடுக்கப்படுமுன் அநேக அற்புதங்களைத் தனது தீர்க்கதரிசிகளின் மூலமும், அப்போஸ்தலர்களின் மூலமும் செய்தார் என்று (அற்புதங்களும், அடையாளங்களும்) ஏற்கனவே பார்த்தோம். இன்று கர்த்தரின் சித்தம் முழுமையாக எழுத்தில் கொடுக்கப்பட்டிருப்பதால் அதை உறுதிப்படுத்தும்படியான அற்புதங்களை கர்த்தர் செய்வதில்லை. வேதம் தனக்கே சாட்சியாக இருப்பதால் அதற்கு இன்று வேறு சாட்சி இன்று தேவையில்லை. ஆனால், சர்வவல்லவரான கர்த்தர் தொடர்ந்தும் வல்லமைகளை நிகழ்த்தக் கூடியவராக இருக்கின்றார். நமது சரீரத் தேவைகளை நிறைவேற்றக் கூடியவராக இருக்கின்றார். ஆகவே, கர்த்தர் தொடர்ந்து தனது மக்களின் வியாதிகளையும், துன்பங்களையும் போக்கக்கூடியவராக இருக்கின்றார். Continue reading