நூல் அறிமுகம்

‘வெளிப்படுத்தின விசேஷத்தின் விளக்கவுரை’

கடைசிக்கால நிகழ்ச்சிகளைப்பற்றி வேதத்தில் காணமுடியாத போதனைகளைத் தரும் ‍அநேக நூல்கள் இன்று கிறிஸ்தவ புத்தக சாலைகளை அலங்கரிக்கின்றன. ஆனால், வெளிப்படுத்தல் விசேஷத்தை விளக்கும் பயனுள்ள ஒரு நூலை தமிழ் பாப்திஸ்து வெளியீடு வெளியிட்டிருக்கிறது. இதன் நிறை குறைகளை இனி ஆராய்வோம்.

இவ்விளக்கவுரை ஒரு ஆங்கில மொழிபெயர்ப்பு. ஆசிரியர் நார்மன் டாட்மேன். பதினொரு அதிகாரங்களில் வெளிப்படுத்தின விசேஷத்தின் 22 அதிகாரங்களுக்கும் 92 பக்கங்களில் சுருக்கமான விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது. நூலாசிரியர் நூலின் ஆரம்பத்தில் வெளிப்படுத்தல் விசேஷத்தை விளக்க பலரும் பயன்படுத்துகிற விதிமுறைகளை விளக்கி அவ்விதிமுறைகளில் தான், ஜடியலிச விளக்கமுறையின்படியே நூலுக்கு விளக்கம் தருவதாக அறிவிக்கிறார். ஜடியலிச விளக்கமுறை வெளிப்படுத்தலை கடந்தகாலத்தைப்பற்றி மட்டும் கூறும் நூலாகவோ அல்லது ‍எதிர்காலத்தைப் பற்றி மட்டும் கூறும் நூலாகவோ கருதாது நிகழ்காலத்தில் விசுவாசிகள் ஆத்மவிருத்தி அடையக்கூடிய செய்திகளைக் கொண்டிருப்பதாகக் கருதி விளக்கமளிக்கிறது. இதற்காக இந்த வேத விளக்கமுறை கடந்த காலத்தையும், எதிர்காலத்தையும் அலட்சியம் செய்வதாகக் கருதிவிடக்கூடாது. அவற்றையும் இது கவனத்தில் எடுத்துக் கொள்கிறது. ஆனால், வெளிப்படுத்தின விசேஷத்தை விளங்கிக் கொள்ள இந்தவிதிமுறையே ஏனைய முறைகளைவிட மேலானது; சிறப்பானது.

Continue reading