பரலோகம் போனவன் திரும்ப முடியுமா?

சமீபத்தில் நண்பர் ஒருவர் சொன்னபடியால் பெனிஹின்னின் ஒரு டி.வி நிகழ்ச்சியைப் பார்த்தேன். அதில் தென் ஆபிரிக்க மனிதன் ஒருவன் இறந்து உயிர்த்தெழுந்தது மட்டுமல்லாமல் பரலேகம் போய் கர்த்தரிடம் முக்கியமான ஒரு செய்தியையும் பெற்று மீண்டும் திரும்பி இந்த உலகத்திற்கு வந்துள்ளதாக ஒரு நிகழ்ந்நி காண்பிக்கப்பட்டது. இந்த தென் ஆபிரிக்க மனிதனே தன்னுடைய அனுபவங்களை இதில் விளக்கியிருந்தான். தான் இறந்தபின் பரலோகம் கொண்டு போகப்பட்டதாகவும், அங்கே அதிசயமான காட்சிகளைக் கண்டதாகவும், பூக்கள் மரங்கள், கட்டடங்கள் எல்லாம் தங்கத்தில் இருந்ததாகவும் கண் சிமிட்டாமல் இந்த மனிதன் விளக்கினான். அதற்குப்பின் தன்னோடிருந்த தேவதூதன் தன்னை நரகத்திற்கு அழைத்துப்‍ போனதாகவும், நகைத்தில் இருந்த கொடுந்துன்பங்களைத் தான் கண்டதாகவும் விளக்கினான். நரகத்தில் ஒரு போதகன் அலறிய காட்சியையும் வர்ணித்தான். அந்தப் போதகன், ஐயா, நான் ஊழியம் செய்யும்போது பணத்தை திருடியது உண்மைதான் ஆனால், அதை திரும்பவும் வைத்து விடத்தான் நினைத்தேன் அதற்கு இந்தக்கஷ்டமா? என்று அலறியதைத்தான் கேட்டதாகவும் சொன்னான். இந்த ஆபிரிக்க மனிதன் சொன்னதில் விசேஷம் என்னவென்றால், கர்த்தர் தன்னைப் பார்த்து, “அப்பா, நீ மறுபடியும் பூவுலகுக்கு போக வேண்டும். அங்கே போய், இயேசு லாசருவின் உவமையில் நரகத்தில் இருந்து ‘ஜெபித்த’ ஐசுவரியவானின் ஜெபத்திற்கு இப்போது பதில் கொடுக்கப்பட்டுவிட்டது. அதனால்தான் நான் உன்னை மீண்டும் பூவுலகுக்கே அனுப்பியிருக்கிறேன். நீ மிகுதியான உன்னுடைய பூவுலக வாழ் நாளில் என்னைப் பற்றி எல்லோருக்கும் சொல்லி அவர்கள் மனந்திருந்துமாறு கேட்டுக்கொள்” என்று தன்னைப் பார்த்து சொல்லி அனுப்பியதாகவும் சொன்னான்.

Continue reading