உங்கள் சிந்தனைக்கு!

இந்தப்பகுதியில் இன்று சுகமளிப்புக்கூட்டங்கள் நடத்தி வருபவர்களைப் பற்றி நாமெல்லோரும் சிந்தித்துப் பார்க்கும்படியாக எழுதத்துணிந்திருக்கிறேன். கூட்டத்துக்கு வாருங்கள், உங்களுடைய தீராத தலைவலி நீங்கும், அற்புதங்கள் நடக்கும் என்ற அறிவிப்போடு சுகமளிப்புக் கூட்டங்கள் பட்டிதொட்டியெல்லாம் நடந்து வருகிறன. வீட்டில் கஞ்சி இல்லாமல் காயும் வயிறுகளும், மூடநம்பிக்கை நிறைந்தவர்களும் ஏதாவது நடந்தாலும் நடக்கும் என்ற நினைப்பில் இந்தக் கூட்டங்களுக்குப் போய்வருகின்றார்கள். கிறிஸ்துவின் பெயரைச் சொல்லி நடந்து வரும் இந்தக்கூட்டங்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று என்னைக் கேட்காதவர்கள் இல்லை. நண்பர்களே! ஆரம்பத்திலேயே என் பதிலை சொல்லிவிட்டு அதற்குக் காரணம் என்ன என்பதை உங்களுக் விளக்குகிறேன். இந்த சுகமறிப்புக்கூட்டங்கள் வைத்து ஆத்துமாக்களின் பிணிகளைத் தீர்க்கும்படி இய‍ேசுவோ, வேதமோ ஒருபோதும் கட்டளையிடவில்லை. கிறிஸ்தவ வேதத்தில் அப்படியொரு போதனையைப் பார்க்க முடியாது. அப்படி ஆண்டவர் சொல்லியிருந்தால் நானே இப்படிக் கூட்டங்கள் போடத் தொடங்கியிருப்பேன். இதை வாசித்த உடனேயே பெந்தகோஸ்தே ஆத்துமாக்கள், இவன் ஆவியில்லாதவன் அதனால்தான் இப்படிப்பேசுகிறான் என்று என்னைத் திட்டுவார்கள் என்பதும் எனக்குத்தெரியும்.

Continue reading