ஏன் பிரசங்கம்?

ஏன் பிரசங்கம்? என்ற கேள்வி உங்களுக்கு ஆச்சரியத்தைத் தரலாம். இன்று பிரசங்கத்தில் அநேகருக்கு ஆர்வம் குன்றியிருக்கிறது. கிறிஸ்தவ சபைகளில் பிரசங்கத்திற்கு அதிக மதிப்புக் கொடுத்து ஆர்வத்துடன் உழைத்து பிரசங்கத்தைத் தயாரிக்கும் போதகர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். இன்று பிரசங்கிகள் பிரசங்கிப்பதைவிட ஜெபக்கூட்டங்களையும், சுகமளிப்புக் கூட்டங்களையும், மனித உணர்வுகளுக்குத் தீனிபோடும் இன்னிசைக் கச்சேரிகளையுமே அதிகமாக நடத்தி வருகிறார்கள். அத்தோடு பிரசங்கம் என்ற பெயரில் உளரிக்கொட்டிக் கொண்டிருப்பவர்களே தமிழ் சபைகளில் அதிகம். இதனால் பிரசங்கத்தைக் கேட்டுவளர வேண்டும் என்ற ஆர்வத்தோடு பிரசங்கத்தைக் ‍கேட்கத்துடிக்கும் ஆத்துமாக்களுடைய தொகையும் குறைந்து வருகின்றது. இதற்குப் பல காரணங்கள் இருந்தாலும் முக்கியமாக பிரசங்கத்தைப்பற்றிய வேதபூர்வமான சிந்தனைகள் இல்லாததும், அதன் காரணமாக ஏற்பட்டுள்ள பிரசங்கத்தைக்குறித்த அவநம்பிக்கையுமே முக்கிய காரணங்கள் என்று கூற வேண்டும். அநேக காலத்துக்கு முன்பு வாழ்ந்த ஒரு பழம் போதகர் வேதபூர்வமான பிரசங்கிகளின் அவசியத்தைப் பற்றிப் பேசும்போது, “பரலோகத்தின் அனுபவத்தைத் தன்னோடு பிரசங்க மேடைக்குக் கொண்டுவந்து, இன்னொரு உலகத்தின் எல்லைக் கோட்டுக்குள் இருந்து பேசுகிறவனைப் போன்ற தேவ மனிதர்களே இன்று நமக்குத் தேவை” என்று கூறியிருக்கிறார். ஆத்துமாக்களின் இருதயத்தைப் பிளந்து அவர்களைக் கர்த்தரின் சந்நிதானத்திற்குக் கொண்டுவரக்கூடிய வல்லமை வாய்ந்த வேதபூர்வமான பிரசங்கத்தைப் பற்றி இந்த ஆக்கத்திலே பார்ப்போம்.

Continue reading