ஸ்ரீ லங்கா – அமைதி திரும்புமா?

தென் ஆசியாவில் இந்திய துணைக்கண்டத்தை ஒட்டிக்கொண்டு இந்து மகா சமுத்திரத்தில் அமைந்திருக்கும் தீவான ஸ்ரீலங்கா இயற்கை காட்சிகள் நிறைந்த அழகான நாடு. ஐரோப்பியர்களும், ஏனைய நாட்டைச் சேர்ந்தவர்களும் போட்டி போட்டுக்கொண்டு தங்களுடைய விடுமுறை நாட்களைக் கழிப்பதற்காக ஓடிவரும் நாடு. நாட்டைச் சுற்றியுற்ற அருமையான வெண்மணற் கடற்கரையோரங்களையும், மத்தியில் குறிர்மையான உயர்ந்த மலைப்பிரதேசங்களையும், எந்நாட்டாரையும் ஏங்க வைக்கும் கண்கவரும் சூழலையும் கொண்டு விளங்கும் நாடு ஸ்ரீ லங்கா. இத்தனைக்கும் பெயர் பெற்ற அந்நாட்டில் கடந்த 20 வருடங்களாக அரச படைகளுக்கம், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடந்து வந்துள்ள போர் ஒரு வருடத்திற்கு முன்பி நோர்வே நாட்டின் உதவியுடன் ஆரம்பமான சமாதானப் பேச்சு வார்த்தையின் காரணமாக ஒரு முடிவுக்கு வந்தது. போர் நிறுத்தத்தினால் உள்நாட்டில் மக்கள் எல்லா இடங்களுக்கும் பிரயாணம் செய்யவும், புலிகளின் கட்டப்பாட்டிலுள்ள பகுதிகளுக்கு பொருட்கள் போகவும் முடிகின்றது. செக் பாயின்டுகளில் அரச படைகளின் தொல்லைகள் இல்லாமல் எங்கும் பிரயாணம் செய்ய முடிவதே ‍பெதும் வசதிதான். இந்தப் போர் நிறுத்தத்தால் உல்லாசப் பிரயாணிகளின் வருகை இந்தவருடம் ஜனவரி மாதத்தில் மட்டும் 12% அதிகரித்திருக்கிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். இதுவரை படைகளுக்கும், ஆயுதங்களுக்கும் செலவிட்டு வந்த கோடிக்கணக்கான பணத்தையெல்லாம் நாட்டைச் செழிப்படையச் செய்யப் பயன்படுத்தலாம் என்பதை எண்ணும்போதே மகிழ்ச்சி ஏற்படுகின்றது. ஆனால், இது போர் நிறுத்தம்தானே தவிர பிரச்சனைகள் எல்லாம் ஒட்டு‍மொத்தமாகத் தீர்ந்துவிட்டதாக எண்ணிவிடக்கூடாது. நிலையான சமாதானம் ஏற்பட பேச்சுவார்த்தைகள் நல்லபடியாக நடக்க வேண்டும். எடுக்கப்படும் முடிவுகளுக்கு எல்லாப் பிரிவினரும் ஆதரவு கொடுத்து நாடு அதை அங்கீகரிக்க வேண்டும். இத்தனையும் நடக்க அதிக காலங்கள் எடுக்கலாம் என்பதை அரசும், விடுதலைப் புலிகளும் உணர்ந்திருக்கின்றனர். ஸ்ரீ லங்காவின் சமாதானத்திற்காகவும், தொடர்ந்து நடந்து வரும் பேச்சு வார்த்தைகள் நல்லபடியாக முடியவும் நாம் ஜெபிப்பது அவசியம்.

Continue reading