அன்றாட வேதவாசிப்பு

வேத வாசிப்பு கிறிஸ்தவனுக்கு அன்றாட உணவைப்போல அவசியமானது. வேதத்தைத் தொடர்ச்சியாகவும், மெதுவாகவும், முழுமையாகவும் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளாதவர்கள் கிறிஸ்தவ வாழ்க்கையைப் பிரச்சனைகளில்லாமல் வாழ்ந்துவிட முடியாது. வாழ்க்கை‍ப் பிரச்சனைகளை தைரியத்தோடு சந்திக்க உதவுவதே வேதம்தான். ‍வேத வாசிப்பு இல்லாமல் ஆத்மிக வளர்ச்சி அடைய முடியாது. கர்த்தரோடு நாம் ஐக்கியத்தில் வரத் துணைசெய்யும் வேத வாசிப்பிற்கு ஒரு நாளில் ஐந்து நிமிடத்தை மட்டும் ஒதுக்குவதால் எந்தப் பயனுமில்லை. அதையும் கூட செய்யப் பலருக்கு சோம்பேறித்தனமாக இருக்கிறது. ஆவியின் அபிஷேகம் வேண்டும் என்று அலைந்து கொண்டிருக்கும் அநேகர் வேதத்தை ஆராய்ந்து படிப்பதில் நேரத்தை செலவிடுவதில்லை. ஆவிக்கும், வேதத்திற்கும் தொடர்பில்லை என்று இவர்கள் நினைக்கிறார்கள் போலிருக்கிறது. இதெல்லாம் இன்றைய கிறிஸ்தவ சமுதாயத்தில் நாம் அன்றாடம் கவனிக்கும் விஷயங்கள்.

Continue reading