உன் வாலிப வயதில் கர்த்தரை நினை!

எலிசாவை ஏளனம் செய்ததற்காக 42 வாலிபர்களை (தமிழ் வேதத்தில் சிறு பிள்ளைகள் என்றிருக்கிறது. அவர்கள் சிறு பிள்ளைகள் அல்ல.) இரு பெரும் பெண்கரடிகள் கொன்று போட்டன என்று 2 இராஜாக்கள் 2: 23, 24-ல் வாசிக்கிறோம். கருணையுள்ள கர்த்தர் இதை ஏன் அனுமதித்தார்? பெற்ற வயிறுகள் பிள்ளைப் பாசத்தால் கத றும்படி இந்தக் காரியம் ஏன் நிகழ்ந்தது? இதற்கு பெற்றவர்களும் கொடூர மாக இறந்துபோன வாலிபர்களுமே பொறுப்பு. வாலிப வயதில் கர்த்தரால் கொடுக்கப்பட்டுள்ள வசதிகளைப் பயன்படுத்தி நல்ல வழிகளில் போகாமல், படிப்பதிலும், ஆத்மீகக் காரியங்களிலும் கவனத்தை செலுத்தாமல் காலேஜ் பெண்களிடம் கைவரிசை காட்டுவது, மாலையில் சக வாலிபர்களுடன் கூடி வீண் அரட்டை அடிப்பது, சபையையும், போதகர் களையும் அலட்சியப்படுத்துவது என்று வாழ்ந்து வந்த அந்த வாலிபர்கள் அன்றைக்கு எலிசா யார் என்று தெரிந்தே அவனை அவமதித்தார்கள். அவர்கள் கூட்டமாகக் கூடி எலிசாவை சுற்றி வந்து ஏளனம் செய்தார்கள். எலிசா தீர்க்கதரிசி இந்த உலகத்தில் கர்த்தருக்குப் பிரதிநிதியாக இருந்தான். அவனிடமே கர்த்தருடைய வார்த்தை இருந்தது. அவன் கர்த்தரின் வழிகளில் போகும்படி இஸ்ரவேலரை நிர்ப்பந்தித்தான். அதெல்லாம் நன்றாகத் தெரிந்திருந்த அந்த வாலிபர்கள், கர்த்தரையும் அவருடைய வழிகளையும் வெறுத்து, ஊர் வம்பிலும், அரட்டை அடிப்ப திலும் காலத்தை செலுத்தி உலக இச்சைக்கு உட்பட்டு எலிசாவை துச்சமாக எண்ணி வலுச்சண்டைக்கு இழுத்து வம்பு செய்தார்கள்.

Continue reading