பெண்கள்! பெண்கள்!

பெண்கள் இன்றைக்கு திருச்சபைகளிலும், ஸ்தாபனங்களிலும் ஊழியத்தில் ஈடுபட்டு வருவது பெருமளவுக்கு அதிகரித்திருக்கிறது. பிரசங்கம் செய்வதும், போதகராகவும், சுவிசேஷ ஊழியராகவும், உதவிக்காரராகவும் இருப்பதோடு சபைகளில் பொது ஆராதனையின்போது ஜெபிப்பதும், அறிக்கை வாசிப்பதும் பெண்கள் இன்றைக்கு செய்துவரும் செயல்களாக இருக்கின்றன. இப்படிச் செய்வதை பெண் விடுதலையாகக் கூட கிறிஸ்தவர்கள் என்று தம்மை அழைத்துக் கொள்ளுகிறவர்கள் எண்ணிக்கொண்டிருக்கிறார்கள்.

பெண்கள் இன்று சமுதாயத்தில் உயர்ந்த இடத்தில் இல்லை என்பது உண்மைதான். பணக்காரர்கள் வீட்டிலும், அந்தஸ்தில் உயர்ந்த இடத்தில் இருப்பவர்களின் வீட்டில் வேண்டுமானால் பெண்களுக்கு சில சுதந்திரங்கள் உண்டு என்று சொல்லலாம். நகர்புறங்களில் வாழ்கிற பெண்களும் சுதந்திரமாக வாழ முடிகின்றது. ஆனால், பெண் வர்க்கத்தில் இவர்கள் வெறும் மைனோரிட்டிதான். பெண் வர்க்கம் இன்றும் அடிமைத்தளையில் தான் இருந்து வருகிறது. இது தகாது என்பதை நாம் ஒத்துக்கொள்கிறோம். ஆனால், இதற்கும் திருச்சபையில் பெண்கள் வகிக்க வேண்டிய பணியைப் பற்றி வேதம் போதிக்கும் போதனைகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பது அனேகருக்குப் புரியாததுதான் விந்தையாக இருக்கின்றது. திருச்சபையில் பெண்கள் தங்களுக்கு கர்த்தரால் விதிக்கப்படாததை செய்வது அவருக்குக் அடங்காமல் நடக்கும் பெரும் பாவம் என்பதை பெண்வர்க்கம் அறியாமல் இருப்பதும் அவலம்தான். திருச்சபை, குடும்பம், சமுதாயம் என்று பிரித்து அவ்விடங்களிலெல்லாம் பெண்கள் எந்தவிதமாக நடந்துகொள்ள வேண்டும் என்பதை வேதம் தெளிவாக விளக்குகிறது. இப்படி விதித்து வைத்திருப்பவர் கர்த்தரே. கர்ததருடைய எண்ணங்கள் தூய்மையானவை. அவருடைய வழிகளைப் புரிந்து கொள்ளாதவர்கள்தான் வேதத்தை மதிக்காமல் பவுல் பெண்களுக்கு எதிரானவர் என்றும், பெண்களைப் பற்றிய வேத போதனைகள் நாம் வாழும் பண்பாட்டிற்கேற்றபடி மாற்றியமைக்கப்பட வேண்டும் என்று வேதத்துக்கு விரோதமான பாதையில் போய்க்கொண்டிருக்கிறார்கள்.

Continue reading