கருத்துரை: ஷேபா மிக்கேள் ஜார்ஜ் (மத்திய கிழக்கு நாடொன்றிலிருந்து)
“சிக்கல் எது என்று அறிந்தாலே, பாதி சிக்கல் தீர்ந்துவிடும்” என்பது பழமொழி. அது போல, ஆர்மீனிய, பெலேஜியனிச, செமி- பெலேஜியனிச போதனைகளின் பிடியில் சிக்கி மெய்யான கிறிஸ்தவ வாழ்வு வாழமுடியாமல் தவிக்கும் தற்கால கிறிஸ்தவர்களுக்கும், சரியான முறையில் சித்தத்தைக் குறிவைத்து சுவிசேஷ பிரசங்கம் செய்யத் தடுமாறும் போதகர்களுக்கும் ‘சிக்கல் எது’ என்பதை விளக்கும் இறையியல் போதனைகளை உள்ளடக்கியது, போதகர் பாலா அவர்களின் ‘மனித சித்தம்’ எனும் நூல்.