வணக்கம் வாசகர்களே! காலங்கள் வேகமாகக் கடந்து போய்க்கொண்டிருக்கின்றன. பத்திரிகை ஆரம்பித்து முப்பது வருடங்கள் கடந்துவிட்டன. சீர்திருத்த சத்தியங்களை ரேஷன் அரிசி போலக் கலப்படமில்லாமலும், எல்லாம் கலந்த சாம்பார் இறையியலை வாசகர்களுக்குப் படைக்காமலும், தனித்துவமுள்ள சீர்த்திருத்த சத்தியங்களை வரலாறு கண்டிருக்கும் விசுவாச அறிக்கைகள் மற்றும் வினாவிடைப் போதனைகளுக்கு சிறிதும் முரண்படாமலும், சீர்திருத்தவாத, பியூரிட்டன் பெரியவர்களின் போதனைகளோடும் நடைமுறைகளோடும் வேறுபட்டு நிற்காமலும், காலத்துக்கும் பண்பாட்டிற்கும், நவீன உத்திகளுக்கும் சிறிதும் இடங்கொடாமலும் சகல போதனைகளையும் இன்றுவரை படைத்தளித்துக் கொண்டிருக்கிறது திருமறைத்தீபம். அது கர்த்தரின் கிருபையால் மட்டுமே ஆகக்கூடிய செயல். அவருக்கே சகல மகிமையும்.