ஒரு விதவையின் விசுவாசம்

2 இராஜாக்கள் 4:1-7

பழைய ஏற்பாட்டில் இது ஒரு அருமையான வேதப்பகுதி. 2 இராஜாக்கள் புத்தகமே ஒரு அருமையான நூலாக இருக்கிறது. என்னுடைய சபையில் அநேக ஆண்டுகளுக்கு முன்பாக இதிலிருந்து செய்திகளைக் கொடுத்திருக்கிறேன். இந்த நூல் ஆரம்பிக்கிற விதமே அருமையாக ஆரம்பிக்கிறது. இது எலியாவுக்குப் பிறகு எலிசா செய்த அரும்பெரும் காரியங்களையெல்லாம் பதிவு செய்திருக்கிறது. எலியா தன் ஊழியத்தை ஆரம்பித்தபோது மிகவும் அதிரடியாக ஆரம்பிப்பதை நாம் பார்க்கிறோம். ஆங்கிலத்தில் Explosive miracles என்று சொல்லுகிற வண்ணம் அருமையான அற்புதங்களையெல்லாம் செய்து அவர் தன் ஊழியத்தைத் தொடங்கினார். இந்த நூலை முழுமையாக வாசிக்கிறபோது அக்காலம் வார்த்தைப் பஞ்சம் நிலவிய ஒரு காலமாக நாம் காணமுடிகிறது. இருந்தபோதும் ஆண்டவர் எலிசாவையும் தீர்க்கதரிசிகளின் புத்திரர்கள் என்று அழைக்கப்படுகிறவர்களையும் அங்கு வைத்திருந்தார். இந்தப் பகுதியை வாசிக்கும்போது ஆகாபின் குமாரனாகிய யோராம் காலத்தில் எலிசா வாழ்ந்திருந்ததை நாம் காண்கிறோம்.

Continue reading