பிரசங்கத்தில் இறையியலின் அவசியத்தை நாம் குறைத்து மதிப்பிடக்கூடாது. இறையியல் இல்லாத பிரசங்கம் உயிரில்லாத உடலைப்போல; அது வெறும் எலும்புக்கூடு மட்டுமே. தரமான பிரசங்கங்கள் தரமான இறையியலைக் கொண்டிருக்கும். இதை நான் சொல்வதற்குக் காரணம், இன்று சுவிசேஷப் பிரசங்கங்கள் எல்லாம், “இயேசுவை விசுவாசி, இயேசுவை விசுவாசி” என்ற அறைகூவலோடு நின்று விடுகின்றன. விசுவாசிப்பது என்றால் என்ன? என்று எவரும் விளக்குவதில்லை. அதைத் துல்லியமாகப் பிரசங்கிகள் வேதத்தில் இருந்து அறிந்துவைத்திருக்கவில்லை.