2 thoughts on “பிரசங்கங்கள்

  1. மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபமெ ன்ன? (மாற்கு 8: 36).

    தன் ஜீவனை இயேசுவின் மூலம் மீண்டும் பெற்றுக்கொண்டவன் அதை இந்த உலகியல் காரிய ஆதிக்கத்திற்குள் அகப்பட்டு தேவனுடைய அன்பை இழந்து போனால் அதுவே ஜீவனை நஷ்டப்படுத்தினத்திற்கு ஏதுவான செயலாகிவிடும். அப்படி ஒருவனும் தன்னைத்தான் இழந்துபோகாமல் கிறிஸ்துவனான ஒவ்வொருவனுக்கும் திருமறை தீபம் வார்த்தை வெளிச்சமாக அவனுக்கு முன் சென்று பாதையை தெளிவாக்க காண்பிக்கிறது.

    இதில் தமிழ் மொழி என்கிற எழுத்து வடிவத்திற்குள்ளாக நம் தேவனாகிய கிறிஸ்து இயேசு எப்படியான அன்பின் உருவெடுத்து நம்முள் வியாபிக்கிறார் என்பதை திருமறை தீபம் வார்த்தையின் படியான ஒளிப்பிரவாகமாக ஜொலிப்பதால் இயேசுவின் பரிபூரண சாயலை ஒவ்வொரு கிருஸ்தனுவானது சரீரத்திலும், இருதயத்திலும் பாதிக்கச் செய்கிறது.

    தேவனது ஊழியத்தில் தேவசாயலை மனிதனுக்குள் நித்தியமாக்கப் பாடுபடும் உங்கள் ஊழியம் சிறக்க இயேசுகிறிஸ்து மூலமாக தேவனை நோக்கி என்றென்றும் பிரார்த்திப்பேன், ஸ்தோத்தரிப்பேன்.

    உலகம் முழுமையான சமாதானத்தை பெரும்படியாக நம் ஆண்டவர் ஆசீர்வதிப்பாராக! ஆமென்.

    Like

Leave a reply to RC-Kalatharan Cancel reply