சமீபத்தில் என் கையில் தமிழில் வெளியிடப்பட்ட ஒரு சுவிசேஷ கிறிஸ்தவ சிற்றிதழ் கிடைத்தது. அதிலிருந்த சில வாசகங்கள் என்னைப் பெருந்திகைப்புக்குள்ளாக்கின. அவ்விதழாசிரியர் இந்திய அரசியல் நிலமைகளையும், வரவிருக்கும் தேர்தலையும் குறிப்பிட்டு, அரசியலில் ஈடுபட்டிருக்கும் கிறிஸ்தவர்கள் கிறிஸ்தவர்களாக நடந்து கொள்வதில்லை என்று குறைகூறியிருந்தார். அத்தோடு நிறுத்தியிருந்தால் பரவாயில்லை. ஆனால், அவர் முன்னாள் மத்திய அமைச்சர் ஜோர்ஜ் பெர்னான்டஸ், முன்னாள் கேரள மாநில முதல்வர் ஏ. கே. அந்தோனி, காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி எல்லோரையும் கிறிஸ்தவர்கள் என்று குறிப்பிட்டு எழுதியிருந்தார். இதழாசிரியருக்கு இவர்களில் யாருமே மெய்க் கிறிஸ்தவர்கள் இல்லை என்பது தெரியாமலிருந்தது. அது ஒருவிதத்தில் எனக்கு ஆச்சரிய மேற்படுத்தாவிட்டாலும் கவலையளிப்பதாக இருந்தது. இந்திய கிறிஸ்தவ உலகத்துக்கு ரோமன் கத்தோலிக்க மதத்திற்கும், புரட்டஸ்தாந்து சுவிசேஷக் கிறிஸ்தவத்திற்கும் இடையில் உள்ள இணைக்க முடியாத வேறுபாடு தெரியாமலிருப்பது கவலை தருகின்ற செய்தியே. கிறிஸ்தவம் எது? என்பது தெரியாமல் கிறிஸ்தவ சுவிசேஷத்தை ஒருவரால் எப்படி விளக்க முடியும்? சோனியா காந்தி ஒரு கத்தோலிக்கர். ஏ. கே. அந்தோனியும் ஒரு கத்தோலிக்கர். இவர்கள் இருவருமே கிறிஸ்தவ விசுவாசத்தை தங்களுடைய வாழ்க்கையில் ஒருபோதும் அறியாதவர்கள்; அடையாதவர்கள். கத்தோலிக்க மதத்திற்கும் சுவிசேஷ கிறிஸ்தவத்திற்கும் இடையில் எந்தத் தொடர்பும் இல்லை; ஒரு போதும் இருந்ததில்லை; இருக்கப் போவதுமில்லை. இந்து மதமும், புத்த மதமும் எந்தளவுக்கு கிறிஸ்தவத்தோடு தொடர்பில்லாத புறஜாதி மதங்களோ அதேபோலத்தான் ரோமன் கத்தோலிக்க மதமும். அடிப்படைக் கிறிஸ்தவ வேதபோதனைகளுக்கெல்லாம் முரணானவை ரோமன் கத்தோலிக்க மதப் போதனைகள். இது தெரியாத தமிழ் கிறிஸ்தவ உலகத்தில் சுவிசேஷ கிறிஸ்தவ ஊழியம் எந்தளவுக்கு மோசமானதாக இருக்கும் என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை. இந்திய கிறிஸ்தவம் இருண்டகாலத்தில் தொடர்ந்திருக்கிறது என்பதற்கு இதைத்தவிர வேறு ஆதாரம் தேவையா?
“கிறிஸ்தவர்” என்ற வார்த்தையை கிறிஸ்துவையும், வேதம் போதிக்கும் சுவிசேஷத்தையும் விசுவாசிப்பவர்களுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும். மெய் விசுவாசத்தைக் கொண்டிராதவர்கள் கிறிஸ்தவர்களலல்ல. ரோமன் கத்தோலிக்க மதம் கிறிஸ்துவை விசுவாசிப்பதில்லை. வேதம் போதிக்கும் சுவிசே ஷத்தையும் அது விசுவாசிப்பதில்லை. ஆகவே, ரோமன் கத்தோலிக்க மதத்தை கிறிஸ்தவ மதமாகக் கருத முடியாது. மேலும், இரட்சிப்புக்கு கிரியைகள் ஆகாது என்று கர்த்தர் அறவே வெறுத்து ஒதுக்க, கிரியைகள் இல்லாமல் இரட்சிப்பு ஒருபோதும் கிடையாது என்று சொல்லுகிறது ரோமன் கத்தோலிக்க மதம். உலகில் இயேசுவைத் தவிர வேறு எவருமே தெய்வமாகப் பிறந்ததில்லை, பிறக்கப் போவதுமில்லை என்று வேதம் போதிக்க, மனிதர்களை (போப்பும், மேரியும், புனிதர்களும்) தெய்வப் பிறவிகளாகக் கருதி வழிபட வைக்கும் தேவ நிந்தனை செய்யும் மதம் ரோமன் கத்தோலிக்க மதம். வேதத்தின் போதனை களை அடியோடு நிராகரித்து வெறும் மனிதப் பிறவியான மேரியையும், பாவத்தின் மொத்த உருவான போப் 2-ம் ஜோன் போலையும் தெய்வமாக எண்ணி வணங்கி, சிலைகளுக்கும், புனிதர்களுக்கும் பூசை, புனஸ்காரங்களை யும், சடங்காச்சாரியங்களையும் நடத்தி வரும் இந்து மதத்தைப் போன்ற சாத்தா னின் கைக்கூலி ரோமன் கத்தோலிக்க மதம். இதை எப்படிக் கிறிஸ்தவத்தின் ஒரு பகுதியாகக் கருத முடியும்? இந்தியாவிலும், இந்தியாவுக்கு வெளியிலும் வாழும் தமிழர்கள் மத்தியில் ரோமன் கத்தோலிக்க மதத்தைக் கிறிஸ்தவத்தின் ஒருபகுதியாகக் கருதி வரும் பேராபத்து தொடர்ந்து நிலவுகிறது. எந்தப் பிசாசை கிறிஸ்து அழிக்க வந்தாரோ அந்தப்பிசாசின் கைக்கூலிக்கு விருந்து வைப்பது போல்தான் ரோமன் கத்தோலிக்க மதத்தைக் கிறிஸ்தவமாக எண்ணுவது.
இதற்கெல்லாம் காரணம் முதலில் (1) தமிழர்கள் மத்தியில் கிறிஸ்தவ இறை யியல் (Christian Theology) என்ற பெயரில் சமய சமரசக் கோட்பாடு (Ecumenism) சபைகளையும், ஊழியங்களையும் ஆண்டு வருவதுதான். கிறிஸ்தவர்களும், சபைகளும் சேர்ந்து இருக்க வேண்டும், உழைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இறையியல் கோட்பாடுகள் அந்த ஒற்றுமைக்கு இடையூராக இருந்துவிடும் என்ற சாத்தானின் ஆலோசனையால் வேத இறையியலைப் பார்த்து பாம்பைக் கண்டு அலறுவதுபோல் அலறி ஓடுகிறது தமிழ் கிறிஸ்தவம். மெய்யான இறையி யல் கோட்பாடுகளை அறியாதவரையில் பிசாசின் சிந்தனையை சத்தியமாக எண்ணி தொடர்ந்து அழிவை நோக்கியே போய்க்கொண்டிருக்கும் தமிழ் கிறிஸ் தவ சபைகளும், ஊழியங்களும். ஒரே சத்தியத்தை விசுவாசிக்கின்ற, நடை முறையில் சத்தியத்தை செயற்படுத்துகின்ற சபைகளுக்கும், ஊழியங்களுக்கு மிடையில்தான் ஒற்றுமை இருக்கமுடியும்; வளர முடியும். ரோமன் கத்தோலிக்க மதம் சத்தியத்தின் விரோதி. கிறிஸ்தவத்தை அழிப்பதற்கு சாத்தான் பயன் படுத்தும் கருவி அது என்ற உண்மையை இறையியலை வெறுக்கும் சமயசமரசக் கோட்பாட்டின் பிடியில் இருக்கும் தமிழ் கிறிஸ்தவம் உணர மறுக்கிறது.
இரண்டாவதாக (2) தமிழ் கிறிஸ்தவம் கிறிஸ்தவ வரலாற்றை அறியாதிருக் கின்றது. தமிழிலுள்ள கிறிஸ்தவ வரலாற்று நூல்கள் எல்லாம் ரோமன் கத்தோ லிக்க மத அடிப்படையிலேயே எழுதப்பட்டிருக்கின்றன. தமிழர் வாழும் பகுதி களிலுள்ள (சமய சமரச) இறையியல் கல்லூரிகள் அனைத்தும் கிறிஸ்தவ வரலாற்றைப் போதிக்கும்போது கத்தோலி¢க்க மதத்தைப் பற்றிய உண்மைகளை வெளிப்படையாகப் போதிப்பதில்லை. 6-ம் நூற்றாண்டுக்குப்பிறகு படிப்படியாக கிறிஸ்தவ சபை வேதத்தை விட்டு விலகிப் போக ஆரம்பித்ததால்தான் ரோமன் கத்தோலிக்க மதம் உலகத்தில் தலைதூக்கியது என்பது பெரும்பாலான தமிழ் கிறிஸ்தவர்களுக்கு தெரியாதிருக்கின்றது. 6-ம் நூற்றாண்டுக்கு முன் ரோமன் கத்தோலி¢க்க மதத்தை வரலாற்றிலேயே பார்க்க முடியாது. (கடந்த இதழில் வந்த சபை வரலாற்றுத் தொடரை வாசித்துப் பாருங்கள்) தேவ குமாரனான இயேசு கிறிஸ்து ரோமன் கத்தோலிக்க மதத்தை உருவாக்க இந்த உலகத்திற்கு வரவில்லை; “என் சபையைக் கட்டுவேன்” என்று சொன்ன இயேசு தன்னுடைய திருச்சபையை, (வேதத்தில் காணப்படும்) தன்னுடைய போதனைகளின் அடிப்படையில் கட்டவே வந்தார். கிறிஸ்தவ வரலாறு தெரியாமலும், சத்தியம் தெரியாமலும் தமிழ் கிறிஸ்தவம் இன்று தள்ளாடிக் கொண்டிருக்கிறது.
மூன்றாவதாக (3) தமிழர்கள் மத்தியில் காணப்படும் சபைகளும், ஊழியங் களும் கிறிஸ்தவ சுவிசேஷத்தைப் பற்றிய தெளிவான அறிவில்லாமல் இருக் கின்றன. இயேசு நேசிக்கிறார் என்பதைத் தவிர இவர்களுக்கு வேறு எதுவுமே தெரியாதிருக்கிறது. இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணத்தின் சத்தியங்களும், மனந்திரும்பி விசுவாசிப்பதன் அவசியமும், இரட்சிப்பு கிரியைகளால் ஏற் படாது என்பதும், மதமோ, சபையோ ஒருவனை மனந்திரும்ப வைக்கமுடியா தென்ற சத்தியங்களும் இவர்களுடைய அகராதியில் இல்லை. வெறும் ஞானஸ்நானத்தை மட்டும் கொடுத்து சபைக்கு ஆள் சேர்த்துக் கொண்டிருக் கின்ற சபைப்பிரிவுகள் இயேசுவின் பெயரில் அது ஒரு போலித்தனமான, பரலோகம் போகமுடியாத கூட்டத்தை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன. வெறும் அனுபவத்தையும், ஆட்டத்தையும் மட்டும் நாடி கத்தோலிக்க பாதிரியான பேர்க்மனைத் தம் மேடைகளில் பாடவும், ஆடவும் வைத்து அழகு பார்த்துக் கொண் டிருக்கிறார்கள் அனேகர். கிறிஸ்தவ சுவிசேஷத்தைப் பற்றிய தெளிவான அறிவில்லாமல் தமிழ் சபைப் பிரிவுகளில் அனேகமானவை ரோமன் கத்தோலிக்க மதத்தை கிறிஸ்தவமாக எண்ணி ஏற்றுக்கொண்டிருக்கின்றன. இன்று சுவிசேஷக் கூட்டங்களை ரோமன் கத்தோலிக்க மதகுருமார் அன்றாடம் அலங்கரித்து வருகிறார்கள். சி. எஸ். ஐ. சபைகள் கத்தோலிக்க மதத்தை உடன்பிறவா சகோதரனாக எண்ணி ஏற்றுக் கொண்டிருக்கின்றன. கிறிஸ்தவ ஸ்தாபனங்களை எடுத்துக்கொண்டாலும் இதே நிலைதான். இந்தளவுக்கு பிசாசு இன்று தமிழ் கிறிஸ்தவத்தைத் தன் கையில் வைத்து ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறான்.
வெளிப்படுத்தல் 20-ல் நாம் வாசிக்கிறபடி பிசாசு கர்த்தரால் கட்டிப் போடப்பட்டிருந்தாலும், கொட்டம் அடங்காது இன்று செய்துவருகின்ற காரியங்களை தமிழர்கள் மத்தியில் தெளிவாகப் பார்க்கிறோம். விசுவாசிகளே சிந்தியுங்கள்! மெய்க்கிறிஸ்தவத்தை அறியாது கிறிஸ்தவம் என்ற பெயரில் தமிழர்கள் மத்தியில் வளர்ந்து வரும் அனேக திருச்சபைகளும், ஊழியங்களும் கர்த்தரின் ஊழியங் களா? அல்லது கர்த்தரின் பெயரில் நடக்கும் பிசாசின் தந்திரமா? கத்தோலிக்க மதத்தை நியாயப்படுத்துகிற எவரும் வரப்போகிற நியாயத் தீர்ப்பு நாளில் இராஜாவாகிய கிறிஸ்துவுக்கு முன் நின்று பிடிப்பது கஷ்டம்!