நுழைவோம் வாருங்கள் கிறிஸ்தவ இலக்கியச் சோலை

தோமா கிறிஸ்தவம்

நான் எழுதி வெளியிட்டிருக்கும் “தோமா கிறிஸ்தவம்” நூல் இப்போது வெளிவந்து விற்பனையாகி வருகிறது. நான் வேகமாக எழுதிய நூல்களில் ஒன்று இது. இதை எழுதவேண்டும் என்ற திட்டம் இருந்ததில்லை. 1980 களில் பிரபலமாக ஆரம்பித்த இந்தப் புராணக்கதை இப்போது மறுபடியும் தலைதூக்கி கிறிஸ்தவர்களைப் பாதித்து வருவதாக சில வாலிபர்கள் என் கவனத்துக்குக் கொண்டு வந்தார்கள். அவர்கள் தந்த ஊக்கத்தால் இதை எழுத நேர்ந்தது. இதை எழுதியது அவசியந்தான் என்று இப்போது எனக்குப் புரிகிறது. ஏனெனில், இதுவரை கிறிஸ்தவர்களில் எவரும் “தோமா கிறிஸ்தவம்” என்ற பெயரில் இருந்து வரும் கருத்துக்களுக்கு எதிர்வினையளித்து எழுதிய எதையும் நான் வாசித்ததில்லை. ஆனால், அதற்கு வக்காலத்து வாங்கித் தீனிபோட்டு வளர்த்து வரும் அநேகர் கிறிஸ்தவர்கள் மத்தியிலும், கிறிஸ்தவர்கள் அல்லாதோர் மத்தியிலும் இருந்து வருகிறார்கள். எனக்குத் தெரிந்து, கிறிஸ்தவரல்லாத, அதே நேரம் கிறிஸ்தவத்தை அதிகம் மதிக்கும் படைப்பாளி ஜெயமோகன் மட்டுமே மரியாதையோடு இதற்கு மறுப்புத் தெரிவித்து வந்திருக்கிறார். கிறிஸ்தவரல்லாதவர்களுக்கும் இதன் போலித்தனம் புரிகிறபோது நம்மவர்களுக்கு அது ஏன் புரியாமலிருக்கிறது என்பது எனக்குத் தெரியவில்லை.

Continue reading