திருமறைத்தீபம் (இதழ் 4, 2021) – வாசிப்பனுபவம்  

போலிப்போதனைகளுக்கு விலகி நில்லுங்கள் என்ற தலைப்பின் கீழ் வந்த கட்டுரை மிகவும் பயனுள்ளதாக அமைந்தது, எனக்குள் நெடுங்காலமாக இருந்த ஒரு கேள்விக்கும் விடை கிடைத்தது, கிரியைவாதம் மற்றும் நியாயப்பிரமாண நிராகரிப்புவாதம் என்பவற்றின் இடையே உள்ள வேறுபாடு என்ன என்பது தான் அந்தக் கேள்வி.

சுருக்கமாகவும் தெளிவாகவும் என்னால் அதை அறிந்து கொள்ள முடிந்தது. இன்று கிரியைவாதத்தை நிராகரிக்கும் சிலரும் நியாயப்பிரமாண நிராகரிப்புவாதம் பேசுவதை நான் கேட்டிருக்கிறேன். பத்து கட்டளைகளை பின்பற்ற தேவையில்லை, அவை நமக்கு அவசியமில்லை என்றெல்லாம் சொல்வார்கள். ஆண்டவரை நேசிக்கிறவன் அவரது வார்த்தைக்கும் கீழ்படிவான் என்ற அடிப்படையை இவர்கள் புரிந்து கொள்ளாதது தான் வருத்தமளிக்கிறது.

பாவத்தின் தன்மையை அறிவதால் வரும் பயன்கள் என்ற பகுதி பாவத்தின் அகோரத்தையும், பாவமன்னிப்பு அருளும் ஆண்டவரின் அன்புள்ளத்தையும், பாவியான என்னை ஆண்டவர் மன்னிப்பது எவ்வளவு அற்புதமானது என்பதையும் அழகாக விளக்கியது, முதலில் என்னால் அதன் ஆழத்தை அறிய முடியவில்லை, பின்னர் என் சொந்த பாவகரமான செயல்களும் அதைப்பற்றிய எனது அனுபவங்களும் உண்மையில் ஆண்டவரின் வசனத்தின்படி நான் எவ்வளவு அருவருப்பானவன் என்பதை அறிய முடிந்ததை, எனக்கு ஆண்டவர் அருளும் மீட்பு எவ்வளவு விலையேறப்பெற்றதாகவும் இருக்கிறதை என்னால் எண்ணிப்பார்க்க முடிந்தது. பாவம் இறைவனின் ஒரே மகனின் மரணத்தினால்தான் நிவிர்த்தியானது என்பது அதன் கொடூரத்தை இன்னும் வழியுறுத்துகிறது, இதைப் பற்றி வாசித்த போது இன்னும் என் சிந்தனைக்கு அற்புதமாக இருந்தது. இன்னும் பல ஆழமான கிறிஸ்தவ சத்தியங்களையும் போதனைகளையும் அறிய விரும்புகிறேன். நன்றி!

– எல்டன் ஜான்

மறுமொழி தருக